அண்மைய செய்திகள்

recent
-

2.42மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வடக்கில் குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை 2.42 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில்
வடக்கிலுள்ள 5 பிரதேசங்க ளின் குடித
ண்ணீர் தேவையை 2014 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யவுள்ளது .

கிராமிய மட்ட குடிதண்ணீர் மற்றும் சுகாதார திட்டத்தின் திட்டப் பணிப்பாளர் எந்திரி தி . பாரதிதாசன் இதற்கான துரித நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றார் .

வடக்கிலுள்ள நெடுந்தீவு , மாதகல் கிழக்கு , சாந்தை , வட்டக்கச்சி கிழக்கு , வட்டக்கச்சி மத்தி ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகளை மையமாகக் கொண்டே இதன் வேலைத்திட்டங்கள் துரிதமாக ஆரம்பிக்க ப்பட்டுள்ளன .

இத்திட்டத்தினை முன்னிறுத்துவதற்கான பொறியியல் மற்றும் முகாமையியல் குழு நிபுணத்துவ சேவைகளை பெற்று நடைமுறைப்படுத்தி வருகின்றது .

குறித்த குடிதண்ணீர் திட்டத்திற்கு ஜப்பான் அரசும் முழுமையாக பங்களித்து வருகின்றது .

இதே - வேளை யாழ் . குடாநாட்டில் குடிதண்ணீர் தேவை கருதி பிரதேச செயலர் மற்றும் பிரதேச சபைகள் ஊடாக தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் தமது விண்ணப்பங்களை தனியாகவும் பொது அமைப்புக்க ளின் ஊடாகவும் முன்வைத்து வருவதாக பிரதேச செயலர்கள் குடிதண்ணீர் மீளாய்வு கூட்டத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது .
2.42மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வடக்கில் குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை. Reviewed by NEWMANNAR on December 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.