வவுனியாவிலிருந்து யாழ். நோக்கிச் சென்ற பஸ் விபத்து! 38 பயணிகள் காயம்
வவுனியாவிலிருந்து - யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டி ஒன்று ஏ - 9 வீதி, பனிச்சங்குளப் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டினை இழந்த பேரூந்து ஒன்று குடை சாய்ந்ததில் அதில் பயணித்த 38 பேர் காயமடைந்தனர்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றே பனிச்சங்குளம் வளைவு ஒன்றில் திரும்பும் வேளையிலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேரூந்து சாரதி மாங்குளம் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவிலிருந்து யாழ். நோக்கிச் சென்ற பஸ் விபத்து! 38 பயணிகள் காயம்
Reviewed by NEWMANNAR
on
December 09, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 09, 2013
Rating:


No comments:
Post a Comment