தர்மபுரத்தில் கசிப்பு உற்பத்தி. மக்கள் பாதிப்பு.
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் என்றுமில்லாதவாறு சட்டவிரோத கசிப்பு உற்பத்தியும் விற்பனையும்
இடம்பெறுவதாகவும் இதனால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் .
கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் அதிகரித்துக் காணப்படுவதால் இதனைத் தடுக்கும் பணிகளில் பொலிஸார் , கிராம அலுவலர்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் .
இருந்தபோதும் கிளிநொச்சி தருமபுரம் 10 ஆம் யுனிற் பகுதியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துக் காணப்படுகின்றது . இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
இப்பகுதியை அண்டிய நெத்தலியாறு பகுதிகளில் அதிகளவாக கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருகின்றது என்றும் இதனால் தமது கிராமத்தில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் , திருட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இடம்பெற்று வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர் .
எனவே இச் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனை யினைத் தடுத்து தமது பகுதியில் இடம்பெறக்கூடிய சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்க வழிவகை செய்யுமாறு மக்கள் பொலிஸாரிடமும் அதிகாரிகளிடமும் கோரியுள்ளனர் .
தர்மபுரத்தில் கசிப்பு உற்பத்தி. மக்கள் பாதிப்பு.
Reviewed by NEWMANNAR
on
December 09, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 09, 2013
Rating:


No comments:
Post a Comment