முசலி பிரதேச சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுக பாதுகாப்பு கொடுப்பனவு இன்று வழங்கப்பட்டது
முசலி பிரதேச சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுக பாதுகாப்பு கொடுப்பனவு
இன்று காலை 9 மணியளவில் முசலி பிரதேசத்தில் உள்ள சில கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுக பாதுகாப்பு கொடுப்பனவான திருமணம்.மரணம்.மகேப்பெற்று மற்றும் வைத்திய சாலை கொடுப்பனவுகளை முசலி பிரதேச செயலாளர் செல்லத்துறை கேதீஸ்வரன் உரிய பயனாளிகளுக்கான கொடுப்பனவினை வழங்கி வைத்தார்
சமுர்த்தி பயனாளியின் பிள்ளைகள் திருமணம் முடித்தால் அவர்களுக்கு உரித்தான 3000 கொடுப்பனவு.சமுர்த்தி பயனாளியின் குடும்பத்தில் யாராவது மரணத்தால் கொடுப்பனவான 10000.அதே போன்று சமுர்த்தி பயனாளியின் மனைவிமார்களின் உடல் நலன் பேனுவதற்கு 5000 வழங்கப்படும் அதே போன்று பயனாளி யாராவது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் அவர்கஞக்கு ஓரு நாளைக்கு 250 ருபா படி ஓரு மாதத்திற்காக கொடுப்பனவுகள் வழங்க முடியும்
இன் நிகழ்வில் முசலி பிரதேச சமுர்த்தி தலைமை முகாமையாளர் பிர்தொஸ்.முசலி பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் அஸ்லிப் மற்றும் .புநெச்சிக்குளம் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச்.எம்.வாஜித் கலந்து கொண்டனர்
பிரதேச செயலாளரின் உதவியுடன் முசலி பிரதேசத்தில் புதிதாக நியமனம் பெற்ற சமுர்த்தி உத்தியோகத்தர்களின் செயற்பாட்டினால் வறுமையில் உள்ள குடும்பங்களை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கு பாடுபட்டு வருவதாக முசலி மக்கள் தெரிவிக்கின்றனர்
முசலி பிரதேச சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுக பாதுகாப்பு கொடுப்பனவு இன்று வழங்கப்பட்டது
Reviewed by NEWMANNAR
on
December 09, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 09, 2013
Rating:





No comments:
Post a Comment