அண்மைய செய்திகள்

recent
-

நானாட்டான் பிரதேச செயலகம் பொன்தீவுகண்டல் மக்களால் முற்றுகை பணிகள் ஸ்தம்பிதம்;: செயலகம் சேதம் -படங்கள்

பொன்தீவுகண்டல் மக்களால் நானாட்டான் பிரதேச செயலகம் இன்று (09-12-2013)காலை 9 மணியளவில் முற்றுகையிடப்பட்டது. இன்று காலை நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்களால் குறித்த காரியாலயம் சுற்றிவளைக்கப்பட்டு குறித்த காரியாலயத்தின் பிரதேச செயலாளரை வெளியில் வந்து தமது பிரச்சினைக்கு பதில் கூற வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
 எனினும் பிரதேச செயலாளர் வெளியில் வராததையிட்டு ஆத்திரம் அடைந்த மக்கள் பிரதேச செயலகத்தின் யன்னல் கண்ணாடிகளை தாக்கி சேப்படுத்தியுள்ளனர்.

பொன்தீவுகண்டல் கிராமத்தில் நீண்டகாலமாக இரு சமூகங்களிடையே முறுகல் நிலைகாணப்பட்டு வந்தது. குறித்த கிராமத்தில் முஸ்லிம் மக்கள் குடியேற்றப்படுவதற்கு பொன்தீவுகண்டல் மக்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர்

எனினும் குறித்த கிராமத்தில் அண்மைக்காலமாக முஸ்லிம் மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் நானாட்டான் பிரதேச செயலகத்தின் ஊடாக மேற் கொள்ளப்பட்டுவந்தது.

இதனை எதிர்த்து குறித்த பகுதியில் வாழும் தமிழ் மக்கள் அப்பகுதியில் தமது முதாதையர் வாழ்ந்து வந்துள்ளனர் எனவே குறித்த காணிகள் தமக்கு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து வந்தனர்.
எனினும் குறித்த தமிழ் மக்களின் எதிர்ப்பினையும் பொருட்படுத்தாது நானாட்டான் பிரதேச செயலாளர் பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாக இம் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந் நிலையில் ஏற்பட்ட பாதக நிலையினை கருத்திற் கொண்டு நானாட்டான் பிரதேச செயலாளர் குறித்த கிராமத்தில் இரு சமூகங்களிற்கும் காணிகளை பிரித்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார் .
இன்நிலையில் பொன்தீவு கண்டல் மக்கள் முஸ்லிம் மக்களை தமது கிராமத்தில் குடியேற்ற தமது கடுமையான எதிர்பினை தெரிவித்துவந்தனர்.
இதனை அடுத்து இன்று குறித்த விடயம் தொடர்பாக உயர்மட்ட கூட்டம் ஒன்று நடைபெறவிருந்தது. குறித்த கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,மாகாண சபை உறுப்பினர் அஸ்மின்,மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை,அருட்தந்தைமாக்கஸ்அருட்தந்தை சுரேஸ், உள்ளிட்ட பலர் குறித்த பகுதியிற்கு வருகை தந்திருந்ததோடு பிரச்சினை தொடர்பாக  ஆராயவிருந்தனர்.
இன்நிலையில் இன்று காலை குறித்த பகுதியிற்கு வந்த பொன்தீவுகண்டல் மக்கள் தமக்கு உரிய தீர்வினை கூறவேண்டும் என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது கோரிக்கை தொடர்பாக நானாட்டான் பிரதேச செயலாளர் கவனத்தில் எடுத்துக்கொள்ளாததை அடுத்து ஆத்திரம் அடைந்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதேச செயலகத்தின் யன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதப்படத்தியுள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதியில் பதற்றநிலைதோன்றியது.
இந்நிலையினை அடுத்து கலகம் அடக்கும் பொலிசார் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டது.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை நானாட்டான் பிரதேச செயலக வளாகத்தை விட்டு வெளியில் செல்லாதவாறும் வெளியிலுள்ள மக்களை உள்நுழையாதவாறும் பொலிசார் அவர்களை குறித்த பகுதியில் முடக்கிவைத்திருந்தனர்;.

இந்நிலையில் மேலும் முறுகல்நிலை நீடித்தது.
இதனை அடுத்து பிற்பகல் அங்கு வருகைதந்த மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை மற்றும் குருமுதல்வர் விக்டர் சோசை அடிகளார் பிரதேச செயலாளரிடம் குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடி பின் சாதகமான சமாதன சூழல் தோன்றியது.
இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,மாகாணசபை உறுப்பினர் அஸ்மின்,அருட்தந்தை சுரேஸ் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவிற்கு அமைவாக பொன்தீவுகண்டல் பகுதியில் முஸ்லிம் மக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டிடநிர்மாண பணிகளை உடன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு நாளை மன்னார் அரச அதிபருடன் சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பாக ஆராய்ந்து இறுதிமுடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து மாலை 4 மணியளவில் பொன்தீவுகண்டல் மக்களின் முற்றுகை போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.
இதேவேளை சேதமாக்கப்பட்ட விபரங்கள் மற்றும் மேலதிக விசாரனையை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்




















































நானாட்டான் பிரதேச செயலகம் பொன்தீவுகண்டல் மக்களால் முற்றுகை பணிகள் ஸ்தம்பிதம்;: செயலகம் சேதம் -படங்கள் Reviewed by Author on December 09, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.