மத்திய அரசாங்கம் யாப்பை மீறி செயல்படுகிறது - எம்.ஏ.சுமந்திரன்
மத்திய அரசாங்கமும் அதனை சூழ உள்ளவர்களுமே அரசியல் யாப்பை மீறிச் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
வட மாகாண சபை அரசியல் யாப்பை மீறிச் செயற்படுவதாக வட மாகாண ஆளுநர் முன்வைக்கும் குற்றச்சாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மறுத்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் இன்று (13) பாராளுமன்றில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வட மாகாண சபை போக்குவரத்து மற்றும் வீடமைப்பு திணைக்களம் அமைக்க எடுக்கும் முயற்சிக்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வட மாகாண சபை அரசியல் யாப்பை மீறிச் செயற்படுவதாக வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில் அரசியல் யாப்பின் மாகாண சபைகள் சரத்துபடி திணைக்களங்கள் அமைக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு இருப்பதாகவும் மேலதிக சட்டக் கொலை துறையில் வல்லமை பெற்ற இராணுவ அதிகாரியான வட மாகாண ஆளுநருக்கு இது தெரிவதற்கு வாய்ப்பில்லை எனவும் சுமதந்தரன் இன்று பாராளுமன்றில் குறிப்பிட்டார்.
அதனால் தான் நன்கு படித்த அறிவுள்ள சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்கும்படி வட மாகாண சபையின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டினார்.
மாகாண நிறுவனங்களுக்கு பிரதான செயலாளர்கள் நியமிக்கும் போது முதலமைச்சரிடம் கருத்து கேட்க வேண்டும் எனவும் ஆனால் மத்திய அரசு அதனை செய்யத் தவறியுள்ளதெனவும் மாகாணத்திற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் நியமனத்தின் போது மாகாண முதலமைச்சரின் கருத்து பெறப்பட்டிருக்க வேண்டும் ஆனால் அதனை செய்ய மத்திய அரசு தவறியுள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
எனவே யார் அரசியல் யாப்பை மீறியுள்ளார்கள் என்பது தெளிவாவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று பாராளுமன்றில் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஆளுநரை அகற்ற வட மாகாண சபை நடவடிக்கை எடுக்கும் என சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Reviewed by Author
on
December 13, 2013
Rating:
Reviewed by Author
on
December 13, 2013
Rating:

No comments:
Post a Comment