அண்மைய செய்திகள்

recent
-

'இஸ்லாமிய சட்டம்' குறித்த கேள்வி தொடர்பில் விசாரணை: பரீட்சை திணைக்களம்

நடைபெற்று முடிந்த 2013 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்  பரீட்சையில் இஸ்லாமிய சட்டம் குறித்து வெளியான கேள்வி தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 

க.பொ.த. (சா/த) பரீட்சையின் இறுதி நாளான நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை விருப்பத்திற்குரிய பாடமாக குடியுரிமை கல்வி மற்றும் சமூக நிர்வாகம் பாடத்திற்கான பரீட்சை நடைபெற்றது.  இந்த பரீட்சையில் பகுதி-II லேயே 'இஸ்லாமிய சட்டத்தின் இரண்டு பாதகமான மூலாதாரங்களை குறிப்பிடுக?' என்ற வினா கேட்கப்பட்டுள்ளது. 

இந்த வினா தொடர்பில் பரீட்சை திணைக்களம் முஸ்லிம் சமூகத்திடம் கவலையினை வெளியிடுவதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் ஏஸ்.முஹமட் தெரிவித்தார்.

இந்த கேள்வி ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் சரியாக இருப்பதாகவுமு; அந்த கேள்வியை தமிழ்மொழிக்கு மொழி மாற்;றம் செய்யும் போது அல்லது தட்டச்சு செய்யும் போது போது தவறு இடம்பெற்றிக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

எனினும், இது தொடர்பில் பரீட்சை திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ளும் என அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழி மூலமான குடியுரிமை கல்வி மற்றும் சமூக நிர்வாகம் வினாத்தாளில் இஸ்லாமிய சட்டத்தின் இரண்டு முக்கியத்துவங்களை குறிப்பிடுக?' என்ற வினா கேட்கப்பட்டுள்ளது என பிரதி பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

இந்த தவறிக்காக பரீட்சை திணைக்களம் முஸ்லிம் சமூகத்திடம் கவலையினை தெரிவித்துக் கொள்வதுடன் விசாரணைகளை மேற்கொள்ளும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த கேள்விக்கு விடை எழுதிய மாணவர்களுக்கு சரியான புள்ளி வழங்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்தது
'இஸ்லாமிய சட்டம்' குறித்த கேள்வி தொடர்பில் விசாரணை: பரீட்சை திணைக்களம் Reviewed by Admin on December 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.