அண்மைய செய்திகள்

recent
-

மருமகளை காதலித்த மாணவனை கொலை செய்தவருக்கு மரணதண்டனை

தனது தங்கையின் மகளான மருமகளை காதலித்த மாணவனை கொலை செய்தவருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

தனது தங்கையின் மகளை காதலித்த 16 வயது பாடசாலை மாணவனை  2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி கிரிந்திவல பண்டாரநாயக்க மாவத்தையில் வைத்து வெட்டிக் கொன்றார் என்று குற்றச்சாட்டப்பட்ட ஒருவருக்கே இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில்  மலர்ச்சாலை உரிமையாளர் உட்பட மூவதை கிரிந்திவல பொலிஸார் கைது செய்தனர். அவர்களுக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இவ் வழக்கின் இரண்டாவது சந்தேக நபர் வழக்கு விசாரணைக் காலத்தில் மரணமடைந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. மூன்றாவது சந்தேக நபரை நீதவான் விடுதலை செய்தார்.முதலாவது சந்தேக நபரான மலர்ச்சாலை உரிமையாளருக்கே  கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி பியகீலி விக்ரமசிங்க மத்துரட்ட மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மருமகளை காதலித்த மாணவனை கொலை செய்தவருக்கு மரணதண்டனை Reviewed by Author on December 20, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.