ஏசிஎப் கொலைகள்: உறவினர்களும் சர்வதேச விசாரணை கோருகின்றனர்
இலங்கையில் செயற்பட்ட பிரெஞ்சு தொண்டு நிறுவனத்தின் உள்ளுர் பணியாளர்கள் 17 பேர் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என அந்நிறுவனம் வைத்துள்ள கோரிக்கையை அப்பணியாளர்களின் குடும்பங்களும் ஆதரிக்கின்றன.
கிழக்கு மாகாணத்தில் போர் ஆரம்பமான கால கட்டத்தில் 2006 ஒகஸ்ட் 6ஆம் திகதி பிரெஞ்சு தொண்டு நிறுவனமான ஏசிஎப் நிறுவனத்தின் உள்ளுர் பணியாளர்கள் 17 பேர் அவர்களின் அலுவலகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்களில் நான்கு பேர் பெண்கள். கொல்லப்பட்ட பெண்ணின் தந்தையும் இதில் கொல்லப்பட்டார்.
தமது நிறுவனத்தின் உள்ளுர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை அரச படைகளே பொறுப்பு என தற்போது குற்றச்சாட்டுகளை வைத்துள்ள ஏசிஎப் நிறுவனம் அதற்கான சாட்சியங்களும் தம்மிடம் இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. இது தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்றும் ஏசிஎப் நிறுவனம் கோரியுள்ளது.
சம்பவம் இடம்பெற்று ஏழு ஆண்டுகளாகியுள்ள போதிலும் படுகொலை செய்யப்பட்ட பணியாளர்களின் குடும்பங்கள் தமது குடும்பத்திற்கு ஏற்பட்ட இந்த துயர சம்பவத்திலிருந்து இன்னமும் மீளமுடியாதவர்களாவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடார்பாக வெளிப்படையாக பேசுவதற்கு அவர்கள் இன்னமும் தயக்கம் காட்டினார்கள். அதேசமயம், சர்வதேச விசாரணைகளின் மூலம் தான் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர். "எந்த விசாரணை என்றாலும் சரி; பொறுப்பானவர்கள் கண்டுபிடிக்கப்படவேண்டும்; எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்று அவர்கள் கூறினார்கள்.
ஏசிஎப் நிறுவனம் இராணுவம் மீது வெளியிட்டுள்ள சந்தேகம் தொடர்பாக அக்குடும்பங்களிடம் கேட்ட போது, தாங்கள் சம்பவத்தை நேரில் காணாமல் இதனை யார் செய்தார்கள் என்று திட்டவட்டமாக தங்களால் கூற முடியாதிருப்பதாகவும் அவர்கள் பதிலளித்தார்கள்.
ஏசிஎப் நிறுவனத்திடம் இது தொடர்பாகவுள்ள சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் தொடர்பாக தாங்கள் எதுவும் அறிந்திருக்கில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஏசிஎப் நிறுவனத்தினால் இக்குடும்பங்களுக்கு இதுவரை இரு தடவைகளில் ரூபா 10 இலட்சம் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும், விசாரணைகள் முழுமையாக முடிந்த பின்பு மேற்கொண்டு உதவி செய்வது தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என அந்நிறுவனத்தால் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.

Reviewed by Author
on
December 13, 2013
Rating:
Reviewed by Author
on
December 13, 2013
Rating:

No comments:
Post a Comment