அண்மைய செய்திகள்

recent
-

கமத்தொழில் ஓய்வூதிய பெறுனர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கை

2014ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் கமத்தொழில் ஓய்வூதிய பெறுனர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் அவ்விடயம் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் நடவடிக்கையாகவும் அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று (02) மேற்கொண்டிருந்தது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தின்போது ராஜபக்ஷ ஆட்சியாளர்களிடம் எமக்கு உக்கிரமடைந்துள்ள 6 பிரச்சினைகளை முன்வைத்தோம். அவற்றில் 5 பிரச்சினைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உதாசீனப்படுத்தியுள்ளார். "கடவுளின் படயலை சாப்பிடுவது போல" விவசாயிகளுக்கு 60 வயதில் வழங்க வேண்டிய ஓய்வூதிய பணத்தை 63 வயதாக அதிகரித்து காவாலித்தனத்தை புரிந்துள்ளார் என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 

கமத்தொழில் ஓய்வூதிய பெறுனர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கை Reviewed by Author on December 02, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.