தொழிலுக்குச் சென்ற மீனவர் கடலில் மூழ்கி பலி
சவேரியார் புரம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான மத்தேஸ் பிரான்சீஸ் சகாயம் (வயது-55) என்பவரே உயிரிழந்தவராவார்.
இன்று சனிக்கிழமை காலை 5.30 மணியளவில் குறித்த நபர் சவேரியார் புரம் கடற்பரப்பில் 'தெப்பம்' ஒன்றில் தொழிலுக்குச் சென்றுள்ளார்.
இதன் போது பலத்த காற்றின் காரணமாக தெப்பம் கவிழ்ந்து நிலையில் குறித்த நபர் கடலினூல் வீழ்ந்துள்ளார்.
இந்த நிலையில் காலை 6 மணியளவில் குறித்த நபர் சென்ற ';தெப்பம'; கரை ஒதுங்கியு;ளளது.
அதனைக்கண்ட சவேரியார் புரத்தைச் சேர்ந்த சக மீனவர்கள் சுமார் 20 படகுகளில் சுமார் 30 இற்கும் மேற்பட்டவர்கள் சென்று தேடுதலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சுமார் 6.30 மணியளவில் குறித்த நபர் மீட்கப்பட்டு சிலாபத்துறை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரனைகளை சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தொழிலுக்குச் சென்ற மீனவர் கடலில் மூழ்கி பலி
Reviewed by Author
on
December 07, 2013
Rating:

No comments:
Post a Comment