மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு. [படங்கள் இணைப்பு]
மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற சுகாதார சேவை சுற்றூழியர்கள் இன்று வியாழக்கிழமை காலை பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
சிறிலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இன்று காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற சுமார் 200 இற்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் இவ் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
காலை 6.30 மணிமுதல் மதியம் 12 மணிவரை அப்பகிஸ்கரிப்பு இடம் பெற்று வருகின்றது.
பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு குறித்த ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
1)6-2006 சுற்றறிக்கையை சரியாக அமுல் படுத்த வேண்டும்.
2)சகல தற்காலிக மற்றும் அமைய ஊழியர்களை நிறந்தரமாக்க வேண்டும்.
3)8 மணித்தியால காலவரையறைக்கு மேலதிகமாக பெற்றுக்கொள்ளப்படும் கடமைகளுக்கான உரிய மேலதிக நேரக்கொடுப்பனவை வழங்க வேண்டும்
4)சீருடைக்கொடுப்பணவை ஒரே தடவையில் வழங்க வேண்டும்
5)5 நாட்களைக்கொண்ட வேலை வாரத்தை செயற்படுத்த வேண்டும்.
6)வாராந்த விடுமுறை நாள் ஒழிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும்.
7)பரிசாரகர்களுக்காக ஒரு வருட காலப்பயிற்சியை வழங்க வேண்டும்.
8)விடுமுறையற்ற பதில் கடமை நியமனங்கள் வழங்குவதை உடனடியாகக் கைவிட வேண்டும்.என்ற 8 கோரிக்கைகளை முன் வைத்து இந்த அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
-இதனால் வைத்திய தேவைகளுக்காக மன்னார் வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
-வெளி நோயளர் பிரிவின் செயற்பாடுகள் மந்த கதியில் இடம் பெற்றறு.இதன் போது வடமாகாண சபை உறுப்பினர்காளான வைத்தியகலாநிதி எஸ்.குணசீலன்,றிப்கான் பதியுதீன் ஆகியோரும் சென்று அவர்களுடைய பிரச்சினைகளை கேட்டரிந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு. [படங்கள் இணைப்பு]
Reviewed by NEWMANNAR
on
January 16, 2014
Rating:

No comments:
Post a Comment