நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்க வேண்டாம்: பெப்ரல் கோரிக்கை
எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை வேட்பாளர்களாக பெயரிட வேண்டாம் என்று இலங்கையில் தேர்தல்களை கண்காணிக்கும் அமைப்பான பெப்ரல் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக்கோரிக்கையை அனைத்து கட்சிகளுக்கும் விடுப்பதாக பெப்ரல் அமைப்பின் தலைவர் ரோஹன ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார்.
நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் என்று தேர்தல் வேட்பாளர்கள் பெயரிடப்படுகின்றனர். இது இலங்கையில் உருப்படியான அரசியல் ஒன்றுக்கு வழிவகுக்காது.
அரசியலில் ஈடுபடுவோர் மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும். வெறுமனே போட்டியிட்டு வெற்றி பெறுபவராக மாத்திரம் இருக்கக்கூடாது.
கடந்த காலத்தை பார்ப்போமானால் விஜயகுமாரதுங்க மற்றும் அர்ஜூன ரணதுங்கவை தவிர வேறு எந்த ஒருவரும் இலங்கை அரசியலில் உரியமுறையில் செயற்படவில்லை.
எனவே உண்மையாக அடிப்படையாக அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்பவர்களை மாகாணசபை தேர்தலிலும் எதிர்வரும் ஏனைய தேர்தல்களிலும் வேட்பாளர்களாக பெயரிடுமாறு ஹெட்டியாராட்சி கோரியுள்ளார்.
நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்க வேண்டாம்: பெப்ரல் கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
January 16, 2014
Rating:

No comments:
Post a Comment