அரச நிறுவனங்களில் தேசிய கொடியை பறக்க விடுமாறு அறிவிப்பு
இலங்கையின் 66வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் 4 ஆம் திகதிகளில் சகல அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையின் 66 வது சுதந்திர தினம் இம்முறை ஜனாதிபதி தலைமையில், கேகாலை சுதந்திர மாவத்தையில் நடைபெறவுள்ளது.
இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அதிதிகள் பலர் கலந்து கொள்ள உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி சுதந்திரதினம் கொண்டாடப்படவுள்ளது.
அரச நிறுவனங்களில் தேசிய கொடியை பறக்க விடுமாறு அறிவிப்பு
Reviewed by NEWMANNAR
on
January 30, 2014
Rating:

No comments:
Post a Comment