இலங்கையில் புகைத்தலால் நாளொன்றுக்கு 60 பேர் உயிரிழக்கின்றனர்
இலங்கையில் புகைத்தலினால் மாத்திரம் ஒரு நாளைக்கு 60 பேர் உயிரிழப்பதுடன் வருடமொன்றில் 20 ஆயிரம் பேரளவில் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடு தழுவிய ரீதியில் கடந்த வருடம் 9 சதவீதத்தினால் புகைப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் கேசரிக்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் ஒரு நாளைக்கு ஆயிரம் பேரளவில் வெவ்வேறு நோய்களினால் உயிரிழக்கின்றனர். அவற்றில் 60 சதவீதமானவர்கள் அதாவது 600பேரளவில் எச்.டீ. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த எச்.டீ. நோயாளிகளில் 6சதவீமான நோயாளிகள் புகைத்தலினால் பாதிக்கப்பட்டவர்களென்பது தெரிய வந்துள்ளது. அதாவது சுமார் 60பேர் புகைத்தலினால் ஒரு நாளுக்கு உயிரிழக்கின்றனர்.
இதேவேளை புகைத்தலினால ஒரு வருடத்திற்கு 20,000 பேர் உயிரிழக்கின்றனர். ஆகவே, எச்.டீ நோயென்பது புலன் உணர்வு குறைவு மற்றும் மரபணு சம்பந்தப்பட்ட விடயங்களினால் ஏற்படுகின்ற நோயாகக் காணப்படுகிறது. இதனடிப்படையில் புகைப்பவர்களும் குறித்த நோயிற்கு இலக்காகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு கடந்த வருடம் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை 9சதவீதமாக குறைவடைந்துள்ளது மேலும், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமளவில் 7 சதவீதமளவில் புகைப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதமளவில் அச்சதவீதம் 9 சதவீதமாக காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
கடந்த வருடம் நவம்பர் மாதமளவில் சிகரெட் ஒன்றின் விலை 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டமையே அதன் பிரதான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் சிகரெட்டின் விலை அதிகரிக்கப்பட்ட பின்பும்கூட புகைப்பவர்கள் சிகரெட்டை விட்டு விடுவதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் சிகரெட்டை இளைஞர்களைவிட வயோதிபர்களே அதிகமாக புகைக்கின்றனர். எனினும்இதற்போதைய சின்னஞ்சிறார்கள் பாடசாலையில்கூட சிகரெட் புகைக்கும் நிலை உருவாகியுள்ளது. அது மாத்திரமின்றி மேலத்தேய பெண்களைப்போல் இலங்கையில் வாழும் பெண்கள் கூட புகைத்தலில் ஈடுபட்டு வரும் நிலை காணப்படுகின்றமை துரதிர்ஷ் டவசமானது.
எனவே, சிகரெட் புகைப்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கமாகும். ஆகையால் சிகரெட் புகைப்பவர்கள் புகை த்தலை நிறுத்த வேண்டுமென்பதே சுகாதார அமைச்சின் வேண்டுகோளாக உள்ளது.
இலங்கையில் புகைத்தலால் நாளொன்றுக்கு 60 பேர் உயிரிழக்கின்றனர்
Reviewed by NEWMANNAR
on
January 30, 2014
Rating:

No comments:
Post a Comment