அண்மைய செய்திகள்

recent
-

இதய சத்திர சிகிச்சைக்கு உதவி கோரல்...

மன்னார் எழுத்துரைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரான ஜே.மலர் (வயது-38) எனும்  பெண் இதய சத்திர சிகிச்சை செய்ய பண வசதி இன்றி பல்வேறு துன்ப துயரத்திற்கு முகம் கொடுத்து வருகின்றார்.

பல வருடங்களாக இதயத்தில் உள்ள வால்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக தொடர்ந்தும் மூச்சுத்தினரல் பிரச்சினைக்கும் உள்ளாகி வருகின்றார்.இதனால் தொடர்ந்தும் துன்பத்திற்கு உள்ளாகி வருகின்றார்.

-தனது கனவர் 10 வருடங்களுக்கு முன் இறந்த நிலையில் தனது குடும்ப வறுமை நிலையின் காரணமாக இந்த நோயை  குணப்படுத்த முடியாத நிலையில் உள்ளேன்.

உடன் சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.இதற்கு 8  இலட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகின்றது.

இரண்டு பெண் பிள்ளைகளையும்,ஒரு ஆண் பிள்ளையினையும் வைத்து தனிமையில் இருக்கும் என்னால் இவ்வளவு பணத்தை சேகரித்துக்கொள்ள முடியவில்லை.

எனவே இந்த நோயை குணப்படுத்துவதற்கு என் இனிய உறவுகளிடமும்,புலம் பெயர் உறவுகளிடமும் உதவிக்கரம் வேண்டி நிற்கின்றேன்.

எனவே எனது சத்திர சிகிச்சைக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உள்ள உறவுகள் தங்களினால் இயன்ற உதவியினை செய்து சத்திர சிகிச்சையினை மேற்கொள்ள உதவியினை மேற்கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

தொடர்புகளுக்கு:-ஜே.மலர்-077 362 43 13

வங்கி விபரம்:-S.L.MALARVILI
BOC-MANNAR BRANGE
ACCOUNT NO:-72019204






முக்கிய குறிப்பு - இப்படியான சேவைகளை பிரசுரிக்க மன்னார் இணையத்தால் இதுவரை காலமும்  எவ்வித கட்டணங்களும் அறவிடப்படவில்லை  இனிமேலும் இப்படியான மக்கள் நலன் சேவைக்கு கட்டணங்கள் அறவிடப்பட மாட்டாது என்பதனை அனைத்து வாசகர்களுக்கும் தெரிவிக்கின்றோம்.
இதய சத்திர சிகிச்சைக்கு உதவி கோரல்... Reviewed by NEWMANNAR on January 29, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.