அண்மைய செய்திகள்

recent
-

ஆவா குழுவினர் பிணையில் விடுதலை

யாழ்.குடாநாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த 'ஆவா' குழுவிற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் பிணை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் மேற்படி குழு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை யாழ் மக்கள் மத்தியில் கடுமையான விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடாநாட்டில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் மேற்படி ஆவா குழு, அபாயகரமான ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டுகளுடன் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்றயதினம் இவர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி பெ.சிவகுமார் சந்தேக நபர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபா பிணை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இந்நிலையில் கைதான எட்டு சந்தேக நபர்களும் பிணையில் வெளியே வந்துள்ளனர். எனவே இவர்கள் தொடர்பான தகவல்களை வழங்கியவர்களுக்கும், செய்திகளை வெளியிட்ட ஊடாகவியலாளர்களுக்கும் இவர்களால் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக இவர்கள் தொடர்பான செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளர்கள் யாழ் நீதிமன்றத்திற்கு முன்பாக வைத்து அச்சுறுத்தப்பட்டனர். மேலும் இவர்களுக்கு எதிராக சாட்சிகளை வழங்கியவர்களும் கடுமையாக அச்சுறுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே ஆவா குழுவிற்கு பிணை வழங்கப்பட்டமையானது, குடாநாட்டு மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவா குழுவினர் பிணையில் விடுதலை Reviewed by NEWMANNAR on January 31, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.