அண்மைய செய்திகள்

recent
-

மெத்தா நிறுவனம் தனது சேவையை கிழக்கு தெற்கு மாகாணங்களுக்கு விஸ்தரித்துள்ளது



கிழக்கு தெற்கு மாகாணத்தில் உள்ள ஊனமுற்றவர்களுக்கு சேவையாற்றுவதற்காக கடந்த 04.01.2014 மாகோ பிரதேசத்தில் மெத்தா நிறுவனம் ஓர் புதிய கிழையை ஆரம்பித்துளளது.

இப்புதிய நிலையம் மாகோ புகையிரத நிலையத்திலிருந்து 1 கி.மீ தூரத்திலமாகோ மாவட்ட வைத்திய சாலைக்கும் அருகில் அமைந்துள்ளது.
இப்புதிய காரியாலயத்தையும் ,வேலைத்தளத்தையும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகான சுகாதார அமைச்சும் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தனர். இனி வரும் காலங்களில் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை புத்தளம போன்ற மாவட்டங்களிலும் ஏனைய தெற்கு , மேற்கு மாகாணங்களில் உள்ள ஊணமுற்றவர்கள் இவ் இலவச சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

மன்னார் வைத்தியசாலையில் இயங்கும் காரியாலயத்தில் மன்னாhஇ ;வவுனியாஇ  போன்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் சிகிச்சை பெற முடியும். 
மேலும் யாழ்ப்பாணம் இ கிளிநொச்சிஇ முல்லைத்தீவுஇ மாங்குளம் இ துனுக்கைஇ பூனகரி போன்ற பிறதேசத்தில் உள்ள மக்கள் பயனடைவதற்காக சித்திரை 2014ல் ஓர் புதிய நிலையத்தை மெத்தா நிறுவனம் ,இலங்கை அமல உற்பவ சபை ( ழு.ஆ.ஐ ) நடாத்தும் லெபாற ஸ்தாபனத்தின் உதவியுடன் மாங்குளம் யு-9  வீதியில் ஆரம்பிக்கப்பட உள்ளது.


மெத்தா நிறுவனம் செயற்கை அவயவங்கள் பொருத்துவதற்கான 80மூ உப பொருட்களை ஜக்கிய இராச்சியத்தில் உள்ள நலன் விருமபிர்கள் மூலம் பெற்றுக் கொள்கின்றது. அத்துடன் செயற்கை பாதங்களை தமது பிரதான வேலைத்தளமான மாகோ நிலையத்தில் உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது;


கடந்த 4 வருடங்களாக ஊனமுற்றவர்களுக்கான சேவையை நடாத்துவதற்கு உதவிய  இலங்கை சுகாதார திணைக்களம்  மன்னார் பிராந்திய சுகாதார பணிப்பாளர் , திருக்கேதீஸ்வரம் சிவன் அருள் இல்ல பணிப்பாளர் வைத்திய கலாநிதி .நமசிவாயம் லெபாறா ஸ்தாபன இலங்கை பணிப்பாளர் வண பிதா போல்நட்சத்திரம், வட மாகாண அரசாங்க அதிபர்கள் போன்றோர்க்கு மெத்தா நிறுவன பனிப்பாளர் வைத்திய கலாநிதி டீ.பனாகமுவ தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து நிற்கின்றார். 

திரு. சின்கிலேயர் பீற்றர் 
மெத்தா தொடர்பு அதிகாரி, 
மெத்தா செயற்கை அவய நிறுவனம்
பொது வைத்தியசாலை. மன்னார்,
தொ. பே.    077-2131-652


மெத்தா நிறுவனம் தனது சேவையை கிழக்கு தெற்கு மாகாணங்களுக்கு விஸ்தரித்துள்ளது Reviewed by Admin on January 08, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.