அண்மைய செய்திகள்

recent
-

ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு, சம்பள அதிகரிப்பு தவறின் தொடரான போராட்டங்களுக்கு ஏற்பாடு. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு.

அதிபர்கள் , ஆசிரியர்கள் பதவியுர்வுகள் மற்றும் சம்பள அதிகரிப்பு போன்ற உரிமைகள்கிடைக்காமையினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர் . எனவே அதிபர் , ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள அதிகரிப்பு உடனடியாக வழங்கப்பட வேண்டும் . தவறின் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளோம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்து ள்ளது .

இந்நிலையைப் போக்குவதற்காக எதிர்வரும் நாட்களில் அடையாளமாக ஒருநாள் சுக யீன விடுமுறைப் போராட்டத்தினை முன்னெடுக்கவும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முடிவெடுத்துள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா புவனேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .

அந்த அறிக்கையில் , ஆசிரியர்களுக்கு வழங்கப்படவேண்டிய பதவியுயர்வுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை . சம்பள அதிகரிப்பும் வழங்கப்படவில்லை . இந்நிலையில் நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் தொடர்ந்தும் விரக்தி நிலையில் கடமையாற்றி வருகின்றனர் . இவற்றிற்கு சரியான தீர்வு உடனடியாக வழங்கப்படாதவிடத்து அனைத்து ஆசிரிய தொழிற்சங்கங்களோடும் இணைந்து தொடரான தொழிற்சங்கப் போராட்டத்தினை நடத்த இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முடிவெடுத்துள்ளது .

கடந்த 2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர் எந்த வொரு ஆசிரியருக்கும் படிநிலைப் பதவி யுயர்வுகள் வழங்கப்படவில்லை . இருபத்தைந்து ஆண்டுகள் கடமையாற்றிய ஆசிரியர்கள் வருடத்திற்கு ஆயிரம் ரூபா வீதம் கூடப் பெறமுடியாத நிலையில் கடமையா ற்றி வருகின்றனர் . இதனால் அனைத்து ஆசிரியர்களும் சுயகௌரவத்தையும் , வாழ்க்கையையும் தொலைத்தவர்களாக வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் . நாட்டில் உயர்ந்துள்ள விலைவாசிக்கு ஏற்ப வாழ்கையைக் கொண்டு நகர்த்த முடியாத அளவிற்கு அல்லல்படும் நிலை காணப்படுகின்றது . இதனை எம்மால் தொடர்ந்தும் ஜீரணித்துக்கொண்டு இருக்க முடியாது .

அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அதிபர்கள் . ஆசிரியர்களுக்கு முறையான சாதகமான அறிவிப்புக்கள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை . இதனை அனைத்து ஆசிரியர்களும் வேதனையுடன் ஒவ்வொரு நாளும் வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர் .

எனவே அரசாங்கம் உடனடியாக ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான அறிவித்தலை வெளியிடவேண்டும் . அத்துடன் வழங்கப்படாத படிநிலைப் பதவியுயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும் .

இல்லையெனில் அனைத்து ஆசிரியர்களும் தமது கடமைகளை ஒறுத்து தொடர் போராட்டங்களை நடத்தவேண்டி ஏற்படும் . வழங்கப்படாத பதவியுயர்வுகளால் வலய , மாகாணங்களில் ஏற்படும் பதவிநிலை அலுவலர்களுக்கான பதவிகளுக்குக் கூட ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது .

இந்நிலைகளைப் போக்குவதற்காக எதிர்வரும் நாட்களில் அடையாளமாக ஒருநாள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தினை முன்னெடுக்க இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முடிவெடுத்துள்ளது .

அதற்கான நாளை வெகுவிரைவில் அறிவிக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் , பொதுச்செயலாளர் ஆகியோர் கூட்டாக இவ்அறிக்கை மூலம் ஆசிரியர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளனர் என்றுள்ளது .
ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு, சம்பள அதிகரிப்பு தவறின் தொடரான போராட்டங்களுக்கு ஏற்பாடு. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு. Reviewed by NEWMANNAR on January 24, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.