கல்விக்காக நம்மை அர்ப்பணித்து ஆற்றலுடைய சமுதாயமாக நாம் வாழ வேண்டும்: பா.உறுப்பினர் சி.சிறீதரன்
கிளிநொச்சி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் பாண்ட அணியின் ஆற்றுகை நிகழ்வு அதிபர் திரு.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மூலம் பாண்ட் அணிக்கான நிதியினை ஒதுக்கி உதவிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி வலய கல்விப்பணிப்பாளர் முருகவேல், வடக்கு மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிபிள்ளை கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளர் வ.நகுலேஸ்வரன், அயல் பாடசாலை அதிபர்களான அதிபர் பங்கயற்செல்வன், அதிபர் குகானந்தராசா, கிளிநொச்சி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் ஆரம்பப்பிரிவு அதிபர் ஆசிரியர் இராஜேந்திரகுமார், கிளிநொசசி மததிய கல்லூரி தேசிய பாடசாலையின் பிரதி அதிபர்கள் திருமதி கணேஸ்வரநாதன், திரு.ஆலாலசுந்தரம் பாடசலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் ஆசிரியர் லோகேஸ்வரன், இக்கல்லூரியின் பழைய மாணவனும் த.தே.கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளருமான வேழமாலிகிதன், கல்லூரியின் பழைய மாணவனும் பா.உறுபபினரின் செயலாளரும் கரைச்சி பிரதேசத்தின் அமைப்பாளருமான பொ.காந்தன ஆகியோரும் கலந்து கொணடிருந்தனர்.
முன்னதாக கல்லூரி விளையாட்டுத்திடலில் பாண்ட வாத்திய பெண் அணியினரின் ஆற்றுகை மதிப்பளிப்பை விருந்தினர் ஏற்றுக்கொண்டனர். நிகழ்வு கல்லூரி மண்டபத்தில் ஆசிரியர் சத்தியானந்தன் தலைமையில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய அதிபர் ரவீநதிரன்,
பா.உறுப்பினர் சி.சிறீதரனால் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மூலம் கடந்த காலங்களில வழங்கிய பாடசாலையின் பல்வேறு துறை வளர்ச்சிககான உதவிகளை நினைவுகூர்ந்து அதற்கான நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். அத்தோடு பாடசாலைக்கான மண்டப ஒலியமைப்பு வசதிகளை செய்து தருமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வலய கல்விப்பணிபபாளர் முருவேல் கருத்து வெளியிடுகையில்,
இந்த பாடசாலை முதன்மையானது. இந்த பாடசாலையில் இருந்து தான் அதிவிசேட சித்தியெய்திய உயரதர வகுப்பு மாணவன் இருக்கிறார். நான் எங்கும் எமது கல்வி வளர்ச்சியை பறைசாற்ற இநத பாடசாலையின் கல்விதரம் காரணமாய் இருக்கிறது. எமது மாவட்டம் தேசிய ரீதியில் உயர்தரத்தில் 70 வீத சித்திகளை பெற்று முதல்நிலை வகிப்பதையும் நான் இங்கு பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதில் இந்த கிளிநொச்சி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் பங்கும் முதன்மையானது எனக் குறிப்பிடடார்.
இந்த பாடசலையின் வளர்ச்சியில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் கண்ணும் கருத்துமாய் இருப்பது இதற்கு மேலதிக பலமாய் இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
இங்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்டு பா.உறுப்பினர் சி.சிறீதரன் சிறப்புரையாற்றும் போது இந்த பாடசாலை மண்டபம் எனக்கு புதிதல்ல. நாங்கள் படிக்கின்ற காலத்தில் தாய்ப் பாடசாலையான இங்கு பல்வேறு புறநிலை செயற்பாடுக்ளுக்காக ஏறியிருக்கின்றோம. எனவே இன்று ஒரு பாடசலையின் வளரச்சியில் பலமாக இருக்கக்கூடிய இந்த பாண்ட் அணி ஆற்றுகை அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகள் பாடசாலைககு ஒரு கம்பீரததை கொடுக்கினறது.
இந்த கல்லூரியின் மிகப்பெரிய மைதானத்தில் வருடத்தின் பெரும்பாலான நாட்கள் எவரெவரோ இந்த பாடசாலையின் செயற்பாடுகளை இடையூறு செய்யும் வகையிலும் கூட களியாட்டங்கள், கலாச்சாரத்தை சீரழிக்கும் செயபாடுகளுக்காக கூட பயன்படுத்துவதை நாம் அவதானித்துள்ளோம். நாம் எமது உரிமைகளை முழுமையாக பயன்படுத்தும் நிலை வேண்டும். நாம் எமது இனத்தை எமது தனித்துவததை எமது நிலத்தில் எமது பூர்வீக இருப்பை உணர்ந்தவர்களாக வாழ வேணடும். இது நமது மாணவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும. அண்மையில நமது நாட்டின் சிஙகள தலைவர் ஒருவர் உரையாற்றும் முன்பு இந்த நாட்டில உற்பத்தி எது என்று கேட்டால நாம் தேயிலை, தெங்கு, இறப்பர் என்று குறிப்பிடுவோம். இன்று எது என்று கேட்டால் கஞசா, கசினோ, குடு என்று சொல்லும் அளவிற்கு இந்த நாட்டின் நிலை தேய்ந்துள்ளது.
எனவே இந்த சீரிழிவில் இருந்து நாம் தப்ப வேணடுமாயின நமது கலவிச் செயற்பாட்டில் நாம் அக்கறையாக இருக்க வேணடும. எமது மாணவர்கள் கல்வியில் மிகுந்த ஆற்றலுள்ளவர்களாக மாற வேணடும் என குறிப்பிட்டார்.
கிளிநொச்சி மத்திய கல்லூரி தேசிய பாடசலையின் வேண்டப்பட்ட தேவைகளுக்கு இம்முறையும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டததில் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யபபடுமெனவும் உறுதி அளிததார்.
கல்விக்காக நம்மை அர்ப்பணித்து ஆற்றலுடைய சமுதாயமாக நாம் வாழ வேண்டும்: பா.உறுப்பினர் சி.சிறீதரன்
Reviewed by NEWMANNAR
on
January 23, 2014
Rating:

No comments:
Post a Comment