வடமாகாண சபை எதிர்கட்சி தலைவருக்கு சபை அமர்வுகளில் பங்கேற்க அனுமதி
நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் டேனியல் ரெக்சிகனின் கொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் முதலாவது சந்தேகநபரான வடமாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரனுக்கு, மாகாண சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதேச சபை தவிசாளரின் கொலை தொடர்பான வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மாவட்ட நீதிபதியும், நீதவானுமாகிய எஸ். லெனின்குமாரால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான கந்தசாமி கமலேந்திரன் விடுத்த வேண்டுகோ பளைரிசீலித்த நீதிமன்றம் வடமாகாண சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கான அனுமதியை அவருக்கு வழங்கியுள்ளது.
இதேவேளை, சக்கமறியலிந்தேகநபரான எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட 3 சந்தேகநபர்களையும் பெப்ரவரி 6ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண சபை எதிர்கட்சி தலைவருக்கு சபை அமர்வுகளில் பங்கேற்க அனுமதி
Reviewed by NEWMANNAR
on
January 23, 2014
Rating:

No comments:
Post a Comment