அண்மைய செய்திகள்

  
-

இந்­திய வீட்டுத் திட்­டத்தின் கீழ் மூன்றாம் கட்­ட­மாக 273 வீடுகள். துணுக்காய் பிர­தே­சத்தில் அமைப்பு.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள நான்கு கிராம அலுவலர் பிரிவுகளில் இந்திய வீட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன . 

 முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கிராமங்களில் இந்திய அரசின் நிதியுதவியுடன் வீட்டுத்திட்டப் பணிகள் இரு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது மூன்றாம் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன . 

 கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட மூன்றாம் கட்டத்தில் 273 வீடுகளின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன . 

 துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள கோட்டைகட்டியகுளம் கிராம அலுவலர் பிரிவில் 37 வீடுகளும் , அணிஞ்சியன்குளம் கிராம அலுவலர் பிரிவில் 118 வீடுகளும் , கல்விளான் கிராம அலுவலர் பிரிவில் 60 வீடுகளும் , யோகபுரம் மத்தி கிராம அலுவலர் பிரிவில் 58 வீடுகளுமாக 273 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன .
இந்­திய வீட்டுத் திட்­டத்தின் கீழ் மூன்றாம் கட்­ட­மாக 273 வீடுகள். துணுக்காய் பிர­தே­சத்தில் அமைப்பு. Reviewed by NEWMANNAR on January 16, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.