அண்மைய செய்திகள்

recent
-

கல்வியின் ஊடாக எமது பண்பாட்டு விழுமியங்களைப் பேணுவோம்: அல்வாயில் சிறீதரன் எம்.பி -படங்கள்

யாழ். அல்வாய் அம்பாள் வித்தியாலய கால்கோள் விழாவும் சேவைநலன் பாராட்டு வைபவமும் இன்று மு.ப 9.00 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் பாடசாலை முதல்வர் திரு. ஆ.சூசைநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன், சிறப்பு விருந்தினராக பிரபல தொழிலதிபர் திரு. பாஸ்கரன், கௌரவ விருந்தினராக இளைப்பாறிய அதிபர் திரு. க. மகேஸ்வரராஜா மற்றும் அதிதிகளாக வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன், கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் வியாகேசு ஆகியோர் உட்பட பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

அல்வாய் அம்பாள் ஆலயத்தில் இருந்து மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உரையாற்றுகையில்,

எதிர்கால இலட்சியக் கனவுகளோடு இங்கே அமர்ந்திருக்கின்ற எமது எதிர்கால சிற்பிகளான மாணவச் செல்வங்களே! தமிழர்கள் என்கின்ற தனித்துவமிக்க இனத்தினுடைய கலை கலாசார பண்பாடுகளை வளர்க்கவேண்டிய கடப்பாடு தங்களுக்கு இருக்கின்றது.

திட்டமிட்ட வகையில் ஆட்சியாளர்களால் வடகிழக்கு சுதேசிகளான தமிழர்களுடைய தனித்துவங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. எத்தகைய அடக்குமுறைகளையோ இடர்களையோ எதிர்கொள்ள நேரிடுகின்றபோது எமது பொக்கிஷமான கல்வியை எந்தவேளையிலும் இழக்காது கல்வியின் ஊடாக சுதந்திரமான, சுபீட்சமான, அறிவாற்றல் நிரம்பிய சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய கடப்பாடு தமிழர்களாகிய எமக்கு இருக்கின்றது.

எனவே வடமராட்சி என்ற வீரம் மிகுந்த மண்ணிலே பல வரலாறுகள் எழுதப்பட்டிருக்கின்றது. அந்த வரலாறுகளையும் எங்கள் மனதிலே கொண்டு சுபீட்சமான எதிர்காலத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபடுவோம் எனவும் கூறினார்.

இவ்விழாவில் மாணவர்களது கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.











கல்வியின் ஊடாக எமது பண்பாட்டு விழுமியங்களைப் பேணுவோம்: அல்வாயில் சிறீதரன் எம்.பி -படங்கள் Reviewed by NEWMANNAR on January 16, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.