அண்மைய செய்திகள்

recent
-

மீனவர் விவகாரம்: பேச்சுவார்த்தை சுமுகமாக நிறைவு

இருநாட்டு மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டுள்ளது. இதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது இரண்டு நாட்டு அரசுகளின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதன்பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று இலங்கை- இந்திய மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டுள்ளது என்று இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் மீன்வள துறை இயக்குநர் அலுவலகத்தில்  தமிழகம் மற்றும் இலங்கை மீனவ பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இடையில் நேற்று  திங்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இருநாட்டு பிரதிநிதிகளும் கூட்டாக அளித்த பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது அவர்கள் கூறியதாவது:- இருநாட்டு மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டுள்ளது. இதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அது இரண்டு நாட்டு அரசுகளின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதன்பின் இறுதி முடிவு எடுக்கப்படும்.

கச்சதீவு பிரச்சனை இரு நாட்டு அரசு சம்பந்தப்பட்டது. அதற்கு இருநாட்டு அரசுகளும்தான் முடிவு காண வேண்டும். இந்திய மீனவர்களுக்கு சில தடைகள் உள்ளது. அதேபோல் இலங்கை மீனவர்களுக்கும் சில தடைகள் உள்ளது. இது பற்றி பேசியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேச்சுவார்த்தையில், தமிழக அரசின் பார்வையாளராக அமைச்சர் ஜெயபால் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மத்திய அரசு சார்பாக வெளியுறவு துறை இணைச் செயலர் சுசித்ரா துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இலங்கையின் சார்பில், அந்நாட்டு மீனவளம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் துறை தலைமை இயக்குநர் நிமல் ஹெட்டியராச்சி தலைமையிலான குழு பங்கேற்றது.

தமிழக மீனவர்கள் தங்கள் கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடிக்கக்கூடாது என்று இலங்கை பிரதிநிதிகள் வலியுறுத்தினர். பாக். ஜல சந்தி பகுதியில் மீன் பிடிக்க அனுமதிப்பதோடு, தங்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தக்கூடாது என்று தமிழகப் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மீனவர் விவகாரம்: பேச்சுவார்த்தை சுமுகமாக நிறைவு Reviewed by Author on January 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.