அண்மைய செய்திகள்

recent
-

ஜெனீவா பிரேரணை குறித்து எந்த தீர்மானமுமில்லை: ஜப்பான்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் மார்ச் மாத அமர்வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை குறித்து இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் நேற்று தெரிவித்தது.

குறித்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் வெளியான பின்னரே இது குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிதொ ஹொபொ தெரிவித்தார். 

எவ்வாறாயினும் இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் குறிப்பட்டார். இது தொடர்பில் டோக்கியோ அதிக கரிசனை செலுத்தி வருகின்றது என அவர் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைக்கு ஜப்பானிய அரசாங்கம் 160 மில்லியன் ரூபாவை அடிமட்ட மனித பாதுகாப்புக்கான நன்கொடை திட்டத்தின் கீழ் இன்று வழங்கியுள்ளது. இது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவரின் உத்தியோகபூர்வ இலத்தில் கைச்சாத்திடப்பட்டது.

இதன்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடந்து உரையாற்றிய இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிதொ ஹொபொ,

"கண்ணிவெடியற்ற நாடாக இலங்கையை மாற்றும் இலங்கை அரசின் முயற்சிக்காகவே இந்த நிதியுதவியினை ஜப்பான் மேற்கொள்கின்றது. இதன் ஊடாக கண்ணிவெடி அகற்றல் செயற்பாட்டினை இலங்கை விரைவில் நிறைவு செய்யும். இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவின் சின்னமாக இந்த செயற்பாடுகள் காணப்படும்" என்றார்.

இந்நிதியில் 77 மில்லியன் ரூபா நிதி மாஹா என்று அழைக்கப்படும் கண்ணிவெடி ஆலோசகர் குழுவிற்கும் 86 மில்லியன் ரூபா நிதி சமூக இணக்கத்திற்கான டெல்வோன் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. 

மக்கள் மீள்திரும்பி வாழ்வாதாரத்தை மீள ஆரம்பிக்க ஏதுவாக கண்ணிவெடி உள்ள இடங்களை பாதுகாப்பான நிலமாக மாற்றியமைக்கும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை துரிதப்படுத்துவதற்கு இந்த நிதி பங்களிப்பு செய்யும். 

கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகளுக்காக கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து ஜப்பானிய அரசாங்கம் 3,025 மில்லியன் ரூபா நிதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜெனீவா பிரேரணை குறித்து எந்த தீர்மானமுமில்லை: ஜப்பான் Reviewed by Author on January 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.