தட்சனாமருதமடு பாடசாலை விளையாட்டு நிகழ்வு - வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் விஜயம்.-படங்கள்
மன்னார் தட்சனாமருதமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் 2014ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய் வல்லுநர் திறனாய்வு போட்டிகள் 24-01-2104 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
நிகழ்வை கல்லூரியின் முதல்வர் திரு அ.ஜெரால்ட் அல்மேடா அவர்கள் தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக வடக்கு மாகாண மீன்பிடிஇ போக்குவரத்துஇ வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பா.டெனிஸ்வரன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக அருட்பணி பீட்டர் இராஜநாயகம் (பங்குத் தந்தை - தட்சனாமருதமடு) திரு.பன்னீர்ச்செல்வம் சர்மா (ஸ்ரீ முருகன் ஆலயக்குருக்கள் - தட்சனாமருதமடு) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
விளையாட்டு நிகழ்வின் முடிவில் பாடசாலையின் அதிபர் தனது உரையில் கௌரவ அமைச்சரிடம் 3 கோரிக்கைகளை செய்து தருமாறு கேட்டுக்கொண்டார். அவையாவன முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து பாடசாலைக்கு வருகின்ற மாணவர்கள் போக்குவரத்து தொடர்பாக பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் அதாவது காலை 6:00 மணிக்கு வருகின்ற மாணவர்கள் பாடசாலை முடிவடைந்து பிற்பகல் 6:00 மணிக்கே வீடு திரும்ப வேண்டியுள்ளது என்றும் போக்குவரத்துக்கான பாதைகள் பழுதடைந்து போக்குவரத்துக்கு ஒவ்வாதனவாகவே காணப்படுகின்றது என்றும் அத்தோடு தங்களது பாடசாலைக்கான நவீன கற்ப்பித்தல் முறைக்கான மல்டி மீடியா நிலையம் ஒன்றும் அவசியமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து உரையாற்றிய கௌரவ அமைச்சர் தனது உரையில் இந்தப்பாடசாலையின் விளையாட்டு நிகழ்விற்கு என்னை அழைத்தமைக்கு பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை முதற்கண் தெரிவிக்கின்றேன் என்றும் நிதி ஒதுக்கீடுகள் குறைவாக இருக்கின்றது என்பதற்காக மக்களுக்கு சேவைகளை வழங்காமல் இருக்க முடியாது எனவே அதற்க்கான வழிவகைகளை உருவாக்க திட்டம் வகுத்துள்ளதாகவும் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க முள்ளிக்குளத்தில் இருந்து வருகின்ற மாணவர்களுக்கு எதிர்வரும் மாதங்களில் ஒழுங்கான போக்குவரத்து சேவை ஒன்றினை வழங்குவது தொடர்பில் போக்குவரத்து சபையுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும்இ வீதிகள் தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களுடன் கதைத்து விரைவில் வீதிப் புனரமைப்பு வழங்குவேன் என்றும் கல்வி எனது அமைச்சின் கீழ் வராவிடினும் எனது மேலான நோக்கம் வறுமையினால் எந்தவொரு பிள்ளையும் கல்வியை இழக்கக்கூடாது எனவே அந்தவகையில் எனது நிதி ஒதுக்கீட்டிநூடாக தங்களது பாடசாலைக்கு மல்ட்டி மீடியா நிலையம் ஒன்றினை அமைத்துத் தருவதாகவும் தெரிவித்தார். அத்தோடு எமது மாகாண மக்கள் ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும் அதாவது எமது மாகாணம் தற்போது உள்ள நிலையில் இழப்புக்கள் என்பது மிக மிக அதிகமாகவே காணப்படுகின்றது அந்தவகையில் முதலில் ஒருவேளை சாப்பாட்டிற்க்கு கஷ்டப்படுகின்ற மக்களை நாம் பார்க்கவேண்டியுள்ளது எனவே அதற்காக உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம் எனவே எமது மாகாணத்தின் வளர்ச்சிப்பாதைக்கு எமது மக்களின் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.

Reviewed by Author
on
January 27, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment