அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மனித புதைகுழி விவகாரம்: சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பு

மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார். 


இதேவேளை, குறித்த பகுதியில் மனித எலும்புக்கூடுகளை தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதுவரையில் 36 முழுமையான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். 

மன்னார் திருக்கேதீஸ்வரம் கிராமஅலுவலர் பிரிவுக்குட்பட்ட மாந்தைச் சந்தியில் இருந்து  திருக்கேதீஸ்வரத்திற்குச் செல்லும் பிரதான வீதியிலிருந்து 75 மீற்றர் தூரத்தில் குடிநீர் விநியோக திட்டப் பணியில் ஈடுபட்டவர்கள் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக கடந்த டிசெம்பர் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை குழி தோண்டியபோது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

அதனை தொடர்ந்து இந்த புதைக்குழி மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் நேற்று 22 ஆம் திகதியுடன் 11 தடவைகள் தோண்டப்பட்டன. நேற்று புதன்கிழமையும் இரண்டு எழும்பு கூடுகள் மீட்கப்பட்டன. 

இந்த மனித புதைகுழியிலிருந்து இதுவரையிலும் 42 எழும்பு கூடுகளும் எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன என்று மீட்பு குழுவில் அங்கம் வகிக்கும் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அதற்கு அப்பால் சிறுவர்களின் பற்கள், பெண்கள் அணியும் முத்துமாலைகளின் முத்துகள், உடைந்த வலைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, 'மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியின் எல்லை எதுவரை உள்ளது என்பதனை கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளோம்' மேற்படி புதைகுழியைத் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவில் அங்கம் வகிக்கும் அநுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரத்ன நேற்று( 21)தெரிவித்தார்.

அத்துடன், இந்த மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக் கூடுகளுக்குரியவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பது தொடர்பில் கண்டறிவதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

'குறித்த மனித புதைகுழியில் இருந்து தொடர்ச்சியாக மனித எலும்புக் கூடுகள் மாத்திரமே மீட்கப்பட்டு வருகின்றன. பாரிய அளவிலான தடையப்பொருட்கள் எவையும் இதுவரை மீட்கப்படவில்லை' என்றார்.

இந்த புதைகுழி இன்று வியாழக்கிழமை 13 ஆவது தடவையாக தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகு
மன்னார் மனித புதைகுழி விவகாரம்: சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பு Reviewed by Author on January 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.