வெள்ளிக்கிழமை ஓம் நமச்சிவாய ஆன்மிகப் பேரணி
பொதுமக்கள் மத்தியில் பக்தி உணர்வை ஏற்படுத்தும் வகையில் வடமாகாணத்தை உள்ளடக்கிய
ஓம் நமச்சிவாய ஆன்மிகப் பேரணி எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது .
இந்து சமய குருமார் ஒன்றியத் தலைவர் சிவஸ்ரீ . சபா . வாசுதேவக்குருக்கள் தலைமை யில் இடம்பெறும் இப் பேரணி யாழ் . வண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து கீரிமலை சிவன் ஆலயத்தை சென்றடையவுள்ளது .
இதன்போது சிவலிங்கத்தின் கட்டம் பொறிக்கப்பட்ட ஒரு இலட்சம் ஓம் நமச்சிவாய துண்டுப் பிரசுரம் வீதிகள் தோறும் வழங்கப்படவுள்ளது .
இந் நிகழ்வில் வடமாகாணத்திலுள்ள இந்துப் பாடசாலைகள் , ஆன்மிக நிறுவனங்கள் , ஆலய பரிபாலன சபைகள் , தொண்டு நிறுவனங்கள் மற்றும் இந்துக்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பேரணியில் கலந்துகொள்ளவுள்ளனர் .
இதன் முன்னேற்பாடாக ஓம் நமச்சிவாய ஆன்மிக பேரணியின் விழிப்புணர்வுப் பவனி நேற்று திங்கட்கிழமை வலி . தென்மேற்கு , சண்டிலிப்பாய் , மானிப்பாய் ஊடாக யாழ் . வைத்தீஸ்வரன் ஆலயத்தை சென்றடைந்துள்ளது .
இதன்போதும் ஓம் நமச்சிவாய கட்டம் பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு ஆன்மிக சிந்தனை ஊடாக சமாதானம் , ஐக்கியம் இனநல்லுறவு , ஒற்றுமை என்பன வலியுறுத்தப்பட்டன .
எனவே இந் நிகழ்விற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பு நல்கி இந்த மாபெரும் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டு ஓம்நமச்சிவாயத்தின் சிறப்பினை உலகெங்கும் பரப்புமாறு இந்து மதகுருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ சபா வாசுதேவக்குருக்கள் அறிவித்துள்ளார் .
வெள்ளிக்கிழமை ஓம் நமச்சிவாய ஆன்மிகப் பேரணி
Reviewed by NEWMANNAR
on
January 22, 2014
Rating:
No comments:
Post a Comment