அண்மைய செய்திகள்

recent
-

திருக்கேதீஸ்வரத்தில் இதுவரை 32 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு – படங்கள்

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 20 ந் திகதி திருக்கேதீஸ்வரம் மாந்தை வீதிக்கு அருகாமையில் இடம்பெற்ற வேலைதிட்டத்தின்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பின் மன்னார் பொலிஸ் ஊடாக மன்னார் மாவட்ட நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

           இதைத்தொடர்ந்து டிசம்பர் 23ம் திகதி தொடக்கப்பட்ட இவ்வகழ்வு வேலையில் இன்று  செவ்வாய்க்கிழமை (06.01.2014) வரை ஆறு நாட்களாக மனித எழும்புக்கூடு எச்ச அகழ்வு வேளை மன்னார் மாவட்ட நீதிபதி செல்வி ஆனந்தி கணகரட்னம் முன்னிலையில் சட்ட வைத்திய நிபுனர் டீ.எல்.வைத்திய ரெட்ன தலைமையில் இடம்பெற்றுவருகின்றன.

           அகழ்வு வேலை நடைபெறும் நாட்களில் நாளாந்தம் மனித எழும்புக்கூடுகளும் எச்சங்களும் கண்டுபிடித்தவன்னமே காணப்படுகின்றது. ஏற்கனவே தோண்டப்பட்ட பகுதியிலேயே தொடர்ந்தும் இவ்அகழ்வுப்பணி இடம்பெற்றுவருகின்றது.

           இவ் அகழ்வுப் பணியில் இதுவரை 32 மனித மண்டையோடுகழும் எழும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்ற போதும் அவைகள் இன்னும் முற்றாக குழியில் இருந்து அகற்றக்கடாமல் இலக்கமிடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது. இவ் எழும்புக்கூடுகளில் சிறுவர்களிக் எழும்புக்கூடுகளும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்தால் இப் புதைகுழிக்குள் பலதரப்பட்ட வயதினரும் இக்குழிக்குள் புதைக்கப்பட்டுள்ளார்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

      இலக்கமிடப்பட்ட எழும்புக்கூடுகளிலிருந்து முற்றாக அகற்றப்படாமல் ஒரு சில எச்சங்கள் மட்டும் நேற்று பொதிசெய்யப்பட்டன. அத்துடன் இன்று அகழ்வு வேலையின் போது 6 மனித எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட வேளையில் ஒரு எழும்புக்கூட்டில் பொண்கள் கையில் நேத்திக்கு கட்டும் செப்புத்தகடான தாயத்து ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
        இன்று  அகழ்வு வேலை இடம்பெற்ற வேலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு யேசேப்பு ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி எ.விக்டர்சோசை அடிகளார் சகிதம்அஇப்புதைகுழியை பார்வையிட்டு சென்றதும் குறிப்பிடத்தக்கது.
         இவ் அகழ்வுப்பணி இன்றுடன் (07.01.2014) இடைநிறுத்தப்பட்டு மீண்டும் 16ம் திகதி வியாழக்கிழமை இவ் அகழ்வப்பணி தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது.
     







திருக்கேதீஸ்வரத்தில் இதுவரை 32 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு – படங்கள் Reviewed by Author on January 07, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.