கச்சதீவில் இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை: மத்திய அரசு பதில் மனு

கச்சதீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை உண்டு என்று மீனவர்கள் பாதுகாப்பு பேரவையின் தலைவர் பீட்டர் ராயப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறையின் துணைச் செயலாளர் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், மத்திய அரசு 1974 ஒப்பந்தத்தின்படி கச்ச தீவில் மீன்பிடிக்க உரிமையில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், 1976 ஆம் ஆண்டிலேயே கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
கச்சதீவில் இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை: மத்திய அரசு பதில் மனு
Reviewed by Author
on
January 24, 2014
Rating:

No comments:
Post a Comment