மன்னார் மறைமாவட்டத்தின் 33வது ஆண்டுகள் நிறைவு விழா நாளை
மன்னார் மறைமாவட்டம் ஏற்படுத்தப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவு விழா மறைசாட்சியரின் மண்ணாம் தோட்டவெளி மறைசாட்சியர் அன்னை ஆலயத்தில் எதிர் வரும் சனிக்கிழமை 25-01-2014 அன்று சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
'மனித மாண்பை குடும்பங்களில் பேணுவோம்' என்கின்ற கருப்பொருளை இவ்வாண்டிற்கான மேய்ப்புப்பணி தொனிப்பொருளாக கொண்டு செயற்படும் மன்னார் மறைமாவட்டம் தனது உதயத்தின் 33 ஆண்டுகள் நிறைவில் அகமகிழ்கிறது.
இம்மகிழ்வின் நன்றித்திருப்பலி மன்னார் ஆயர் மேதகு இரா.யோசேப்பு ஆண்டகை தலைமையில் மறைமாவட்டத்தில் பணியாற்றும் சகல அருட்பணியாளர்களின் கூட்டிணைவில் 25, தை, 2014 அன்று காலை 7.30 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படும். இவ்விழாவிற்கு வேண்டிய சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மறைமாவட்ட பங்குகளிலிருந்து விசுவாசிகள் அனைவரும் அணிதிரண்டு இவ்விழாவில் பங்கெடுத்து இறையாசீர் பெற அன்புடன் அழைக்கப்படுகின்றனர். விழா நாளிலே பயண ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் தோட்டவெளி மறைசாட்சியர் அன்னை ஆலய சுற்று வட்டத்திலே விளையாட்டு, வினோதப் பொருட்களுக்கான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகிறோம்.
மன்னார் மறைமாவட்டத்தின் 33வது ஆண்டுகள் நிறைவு விழா நாளை
Reviewed by Author
on
January 24, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment