அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகரசபை நிதியின் ஊடாக நிர்மானிக்கப்பட்ட கடைத்தொகுதி திறந்துவைப்பு –படங்கள்

மன்னார் நகரசபை, மன்னார் நகர சபைக்குட்பட்ட பகுதியில்   பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதன் அடிப்படையில் மன்னார் நகரப்பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவிற்கு அருகாமையில் பல லட்சம் ரூபாய் செலவில் கடை தொகுதி ஒன்று அமைக்கப்பட்டு நேற்று வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த கடை தொகுதியினை மன்னார் நகர சபை தலைவர் எஸ..ஞானபிரகாசம் வைபவரீதியாக திறந்து வைத்தார்.

இதன் போது மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்இமன்னார் நகர சபையின் செயலாளர் லேனாட் பிரிட்டோஇநகர சபை உறுப்பினர்கள்இநகர சபை அலுவலர்கள் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்படி முதற்கட்டமாக 26 கடைகள் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இதேவேளை மொத்தமாக 40 கடைகள் இங்கு அமைக்கப்படவுள்ளது.

தலா ஒவ்வொன்றும் 10 அடி நீளமும் 10 அடி அகலமும் உடையதாக அமைக்கப்பட்டுள்ள குறித்த கடை ஒன்றிற்கு ஒரு லட்சத்தி இருபத்தி ஜயாயிரம் ரூபா(125000) செலவிடப்பட்டுள்ளது.

குறித்த கடைகள் திறந்து வைக்கப்பட்டதை அடுத்து மன்னார் நகரசபைக்கு சொந்தமான சந்தைபகுதியில்; அமைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டு வரும் குறித்த கடை தொகுதியிற்கு மாற்றப்படவுள்ளது.
இதேவேளை மன்னார் நகரசபையிற்கு சொந்தமான பழைய சந்தைப்பகுதியிலிருந்து மாற்றப்படும் கடைகள் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள  கடைத் தொகுதியிற்கு மாற்றப்பட்ட பின் பழைய சந்தைப்பகுதி; வாராந்த (சனி,ஞாயிறு) பொது சந்தையாக மாற்றப்படவுள்ளது.

இதன் மூலம் உள்ளுர் உற்பத்தியாளர்கள் மற்றும் வெளியூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதோடு  குறித்த சந்தை பகுதியில் வியாபாரிகளுக்கு வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல ஓரு களமாக அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

புதிதாக திறந்துவைக்கப்பட்ட  கடை ஒன்றிற்கு 500 000 லட்சம் ரூபா பெறப்பட்டு மன்னாரை நிரந்தர வதிவிடமாக கொண்ட வியாபாரிகளுக்கு கடைகள் நிரந்தரமாக வழங்கப்படவுள்ளது







மன்னார் நகரசபை நிதியின் ஊடாக நிர்மானிக்கப்பட்ட கடைத்தொகுதி திறந்துவைப்பு –படங்கள் Reviewed by Author on January 21, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.