அண்மைய செய்திகள்

recent
-

புனர்வாழ்வு பெற்றவர்களுக்கு தொடர்ந்தும் திறந்த வெளிச் சிறையா?

புனர்வாழ்வு பெற்ற எமது உறவுகளுக்கு நாம் உதவி செய்ய கட்டுப்பாடுகளைப் போடுவது மிகவும் மோசமான செயற்பாடாகும் என வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

கடந்த 12ஆம் திகதி அழிந்து செல்லும் எமது கலைகளை கட்டிக்காக்கும் நோக்கில் முள்ளியவளை முதலாம் வட்டாரத்தில் கலை நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியிருந்தேன். இந்த கலை நிகழ்வில் புனர்வாழ்வு பெற்றவர்களும் சிறுவர்களும் பங்குபற்றினர். 

புனர்வாழ்வு பெற்றவர்களில் இரண்டு கண்களையும் இழந்த ஒருவரும் இரண்டு கால்களை இழந்த மற்றுமொருவரும் தங்களுடைய நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். 

அப்போது அங்கு வந்த இராணுவத்தினரும் பொலிசாரும் எனது வீடியோ ஒலிநாடாவைப் காரணங்கள் இன்றி ஒலிப்பதிவு செய்தவரிடம் இருந்து எடுத்துச் சென்று விட்டனர். இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட ஒலிநாடா இன்னும் என்னிடம் ஒப்படைக்கப்படவில்லை. 

இது தொடர்பில் பொலிசாரிடமும் இராணுவத்திடம் நான் கேட்ட போது புனர்வாழ்வு பெற்றவர்களுக்கான கலை நிகழ்வுகள், அவர்களுக்கான உதவிகள் என்பவற்றை செய்வதாக இருந்தால் புனர்வாழ்வு அமைச்சிடம் அனுமதி பெற வேண்டும். 

அவ்வாறு அனுமதி பெறாமல் உதவிகளை வழங்க முடியாது. அனுமதி பெறாது அவர்களை உள்வாக்கியிருந்ததால் தான் வீடியோ ஒலிநாடா பெறப்பட்டது எனத் தெரிவித்தனர். 

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமுதாயத்தில் விடப்பட்டவர்கள் தங்களது சுய விருப்பின் பெயரில் கலை நிகழ்வுகளில் பங்கு பற்ற தடை போடுவது அவர்களது மனித உரிமையை மீறும் செயலாகும். இது ஆரோக்கியமானது அல்ல. 

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் திறந்த வெளிச் சிறைச்சாலையில் தான் வாழ்கின்றார்களா?. 

எமது உறவுகளுக்கு உதவி செய்வதற்கும் அவர்களுடன் இணைந்து எமது கலாசாரத்தை பாதுகாப்பதற்கும் நாம் யாரிடமும் அனுமதி பெறவேண்டிய தேவை இல்லை. அது எமது உரிமை. 

அதனை தடுப்பது இன நல்லிணக்கத்திற்கு உதவாத மிக மோசமான செயற்பாடாகும் என அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
புனர்வாழ்வு பெற்றவர்களுக்கு தொடர்ந்தும் திறந்த வெளிச் சிறையா? Reviewed by Author on January 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.