அண்மைய செய்திகள்

recent
-

'ஜில்லா'வுக்கு ஆதரவாக யாழில் ஆர்ப்பாட்டம்

தென்னிந்திய நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான 'ஜில்லா' திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அத்திரைப்படம் தொடர்பில் வெளியான விமர்சனத்தைக் கண்டித்தும் யாழ்ப்பாணத்தில்
ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நடிகர் விஜயின் ரசிகர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் கடந்த (21) முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும், இலங்கைத் தமிழர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் சினிமா நடிகர் ஒருவருக்கு ஆதரவாகப் போராடுவதா என்று ஆர்ப்பாட்டக்காரர்களை வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், விரட்டியடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த திரைப்படத்துக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான பத்திரிகையொன்றில் விமர்சனமொன்று எழுதப்பட்டிருந்தது. இந்த விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், குறித்த பத்திரிகை நிறுவனத்தின் முன்னால் விஜய் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். 

இதன்போது, அங்கு வந்துள்ள வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், 'தமிழர்கள் மத்தியில் எவ்வளவு பிரச்சினைகள் இருக்க நீங்கள் இதற்கெல்லாம் போராட்டம் நடத்துகின்றீர்களே!, எங்கள் மக்களுக்காக நடைபெற்ற இத்தனை போராட்டங்களில் எவற்றில் நீங்கள் கலந்துகொண்டீரர்கள்" என்று கேள்வி எழுப்பினார்.

"நடிகரின் கட்டவுட்டிற்கு பால் ஊற்றுதல் கோஷங்கள் போடுதல் என்று உங்கள் காலங்களை வீணடிக்கின்றீர்கள். உங்கள் எதிர்காலம் பற்றி நீங்கள் சிந்திக்காமல் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றீர்கள். இங்கிருந்து நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது. நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் எனக்கூறி இங்கிருந்து அகன்று செல்லுங்கள்  என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சாடியுள்ளார். 

இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து கலைந்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. 
'ஜில்லா'வுக்கு ஆதரவாக யாழில் ஆர்ப்பாட்டம் Reviewed by Author on January 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.