திருக்கேதீஸ்வரத்தில் மேலும் நான்கு எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு பெண்கள் கழுத்தில் அணியும் மாலையின் சில பிளாஸ்ரிக் முத்துக்களும் கண்டெடுப்பு –படங்கள்
மன்னார் திருக்கேதீஸ்வரப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழியை ஏழாவது நாளாக அகழ்வு செய்தபோது நான்கு மண்டை ஓடுகளும் எச்ச கும்பல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக் கூட்டின் தொகை முப்பத்தாராக அதிகரித்துள்ளது. அத்துடன் பெண்கள் கழுத்தில் அணியும் முத்து மாலைக் குண்டுகளும் நேற்று கண்டு பிடிக்கப்பட்ட மனித எழும்புக் கூட்டு கழுத்துப் பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ந் திகதி மன்னார் திருக்கேதீஸ்வர பிரிவிலுள்ள மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி நேற்று (16.1.2014) வியாழக் கிழமை மன்னார் நீதவான் நீதிமன்ற மாவட்ட நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி டீ.எல்.வைத்தியரத்தின தலைமையில் ஏழாவது நாளாக காலை 8.30 மணி தொடக்கம் மாலை 1.30 மணி வரை இவ் மனித புதைகுழி அகழ்வு வேலை இடம்பெற்றது.
நேற்று இடம்பெற்ற அகழ்வின்போது சுமார் நாலு அடி நீளமும் உடைக்கப்பட்ட நடை பாதையிலிருந்து றோட்; சுமார் இரண்டடியும் எலும்புக் கூடுகளை கண்டுபிடிக்கும் நோக்குடன் பெகோ மூலம் மண் அகழ்வு இடம்பெற்றது.;
இருந்தபோதும் புதிய இடத்தை விட்டு பழைய தோண்டப்பட்ட பகுதியில் சுமார் இரண்டு இரண்டரை சென்ரி மீற்றர் தூரத்தில் அகழ்வு இடம்பெற்றபோதே நேற்று நான்கு மண்டையோடுகளும் அத்துடன் பெண்கள் களுத்தில் அணியும் பிளாஸ்ரிக் முத்துமாலை குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன.
நேற்று இவ் அகழ்வு பணி முடிந்தபின் வைத்திய கலாநிதி வைத்தியரத்தின ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் கண்டு பிடிக்கப் படும் மனித எலும்பு கூடுகள் ஊடகங்கள் தற்பொழுது வெளியிடும் தொகையை நான் சரி பிழையென கூறமுடியாது மாறாக பூர்த்தியாகும்பொழுதே உறுதியாக கூறமுடியும்
ஏனென்றால் வீதி அபிவிருத்தி வேலை செய்யும் போது இந் நிலம் தோண்டப்பட்ட வேளையில் இவ் எழும்புக்கூடுகளில் சில சேதமாக்கப்பட்ட நிலையில் மீண்டும் குவிக்கப்பட்டிருப்பதால் கண்டுபிடிக்கும் எழும்புக்கூடுகளில் தொகையை கணக்கிடமுடியாத நிலை இருக்கின்றது.
எத்தினை வருடகாலத்தில் இச் சம்பவம் இடம்பெற்றிருக்கும் என்பதை எழும்புக்கூடுகள் மூலம் தற்போது கண்டுபிடிக்கமுடியுமா? என்று கேட்ட கேள்விக்கு, தற்போது என்னால் பதில் சொல்ல முடியாது இதை பகுப்பாய்வு செய்ய வேறு ஒரு பகுதி இருப்பதால் அவர்களாளயே கண்டுபிடிக்க முடியும் என தெரிவித்தார்.
நேற்று 1.30 மணியுடன் இடைநிறுத்தப்பட்ட இவ் அகழ்வுப்பணி மீண்டும் இன்று காலை அகழ்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Reviewed by Author
on
January 16, 2014
Rating:
No comments:
Post a Comment