அண்மைய செய்திகள்

recent
-

ராதிகாவை பொலிஸார் கண்காணிக்கவில்லை'

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனை பொலிஸார் கண்காணிக்கவில்லை என யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்சிகேரா நேற்று வெள்ளிக்கிழமை (03) தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (03) காலை 10 மணியளவில் நடைபெற்றது.

இதன்போது, 'யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனை வீட்டுக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு சிவில் பொலிஸார் அவரை கண்காணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது' என ஊடகவியலாளர்கள் எழுப்பியுள்ள கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார். 

 'சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்து இவர் வடமாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டு, பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடிய போது, அதனை குடிவரவு திணைக்களத்தினர் மற்றும் பொலிஸார் கண்காணித்ததாகவும் கனடா பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது' என பத்திரிகையாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளனர். 

அதற்கு அவர் பதிலளிக்கையில், அவ்வாறு பொலிஸ் கண்காணித்தாக பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தால், மேற்படி செய்தியினை வெளியிட்ட பத்திரிகை நிறுவனத்தினையே கேட்குமாறும் அவர் பதிலளித்தார்.
ராதிகாவை பொலிஸார் கண்காணிக்கவில்லை' Reviewed by Author on January 04, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.