நோய் பரவாமலிருக்க மாடுகளுக்கு தடுப்யூசி
வெளி மாவட்டங்களில் மாடுகளுக்கு நோய் பரவி வருவதால் இவ் நோய் மன்னாரிலும் பரவாதிருக்குமுகமாக மாடுகளுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கையை மன்னார் கால்நடை சுகாதார வைத்திய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
.jpg)
தற்பொழுது யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் மாடுகளுக்கு கால்வாய் என்னும் நோய் பரவி வருவதைத் தொடர்ந்து இவ் நோய் மன்னார் பகுதியிலும் பரவாதிருக்குமுகமாக மன்னார் கால்நடை சுகாதார வைத்திய நிலையம் இப்பொழுது மன்னார் பிரதேச செயலக பிரிவிலுள்ள மாடுகளுக்கு தடுப்பூசி போடும் செயல்பாட்டில் இறங்கியுள்ளது.
மன்னார் பிரதேச செயலக பிரிவில் சுமார் 5000 க்கு மேற்பட்ட மாடுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நோய் பரவாமலிருக்க மாடுகளுக்கு தடுப்யூசி
Reviewed by Author
on
January 06, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment