அண்மைய செய்திகள்

recent
-

காணாமற் போனோர் தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும்

இலங்கையில் காணாமற் போனோர் என்ற ஒரு மனித இனம் உருவாகியுள்ளதாகவும் அந்நிலைமையினை அரசாங்கம் கவனத்தில் எடுத்து சரியான முறையில் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபைக் கட்டிடத்தில் நேற்று (09) நடைபெறபோது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

'காணாமற் போனோரின் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்' என வலியுறுத்தும் பிரேரணையொன்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனால் வடமாகாண சபையில் நேற்றுசமர்ப்பிக்கப்பட்டது. இந்தப் பிரேரணையினை வழிமொழிந்து பேசியபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, அரசியல் கைதிகள் எந்தவித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதிக்கு வலியுறுத்தும் மகஜர் ஒன்றினை வட மாகாணசபை உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்தார். 

அத்துடன், விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர்களாக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன், கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், பதுமன் ஆகியோருக்கு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கி பதவிகளையும் வழங்கியுள்ள நிலையில், ஏன் ஏனைய அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கூடாது எனவும் சிவாஜிலிங்கம் இதன்போது கேள்வி எழுப்பினார். 

அவரது கேள்விக்கு பதிலளித்து உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், 'கடந்த 2ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போது காணாமல் போனோர் தொடர்பாகவும் அரசியல் கைதிகளாகவும் உள்ளோரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டேன். 

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, 'இது சட்டரீதியான பிரச்சினை. இதனை சட்டரீதியாக தான் முன்னெடுக்க வேண்டும்' எனவும் கூறியதோடு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு லலித் வீரதுங்குவிற்கு உத்தரவிட்டார்' என்று கூறினார். 

எவ்வாறாயினும், காணமற் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பான விடயங்கள் ஜனாதிபதியினூடாகவே மேற்கொள்ளப்படல் வேண்டும்' எனவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.  
காணாமற் போனோர் தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும் Reviewed by Author on January 10, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.