அண்மைய செய்திகள்

recent
-

ஸ்டீபன் ஜே.ரெப் புதுமாத்தளன் யுத்த சூனிய வலயத்திற்கு விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெபிற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்தார்.

இதன்போது யுத்த சூனிய வலயம் - 2 அமைக்கப்பட்டிருந்த புதுமாத்தளன் பாடசாலை, வைத்தியசாலை மற்றும் யுத்த காலத்தில் புதுக்குடியிருப்பில் அமைந்திருந்து ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கும் ரெப் விஜயம் செய்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசனும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டார் என்று அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட யுத்த சூன்ய வலயத்தில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பொதுமக்கள் அகப்பட்டிருந்தனர். யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் யுத்த சட்டங்களை மீறுவதாக மனித உரிமை கண்காணிப்பகம் 2009 ஆம் ஆண்டு அறிவித்திருந்தது.

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட மிகவும் ஒடுங்கிய பகுதியான யுத்த சூன்ய வலயத்தில் அகப்பட்டுள்ள பொதுமக்களை அப்பகுதியிலிருந்து வெளியேறுவதற்கு புலிகள் தடுத்துவருகின்றனர். அதேவேளை அரசாங்க தரப்பினர் அந்த பகுதியில் திரும்ப திரும்ப கண்மூடித்தனமாக ஷெல் தாக்குதலை மேற்கொண்டனர் என்றும் அவ்வமைப்பு அன்று தெரிவித்திருந்தது.


புதுமாத்தளன் வைத்தியசாலையின் தற்காலிக கொட்டகையும் இந்த யுத்தசூன்ய வலயத்தில் இருந்ததாகவும் 2009 ஆம் ஆண்டு 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் காயமடைந்தவர்கள் அந்த கொட்கையில் சிகிச்சை பெற்றுவந்தனர் என்றும் அந்த அமைப்பு அன்று சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 
ஸ்டீபன் ஜே.ரெப் புதுமாத்தளன் யுத்த சூனிய வலயத்திற்கு விஜயம் Reviewed by Author on January 10, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.