திருக்கேதீஸ்வர சிவராத்திரி உற்சவம் தொடர்பான விசேட கூட்டம்-படங்கள்
எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ள சிவராத்திரி தினத்தை ஒட்டி திருக்கேதீஸ்வர ஆலய மகாசிவராத்திரி உற்சவம் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்று நேற்று திங்கள்கிழமை (10.02.2014)திருக்கேதீஸ்வர ஆலய மண்டபத்தில் பிற்பகல் 2 மணியளவில் மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை. எஸ். தேசபிரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றது
குறித்த கலந்துரையாடலின்போது உதவி மாவட்ட செயலாளர் பரமதாஸ், மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியகட்சகர் சரத் குமார ஜோசப் , மன்னார் பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அத்தியகட்சகர் ஜ.பி.ரி.சுகதபால , திருக்கேதீஸ்வர திருப்பணிசபை செயலாளர் திருநாவுகரசு, கூட்டுப்பொருளாளர் எஸ்.எஸ்.ராமகிருஸ்ணன், அறங்காவல் குழு உறுப்பினர் எஸ்.குமார் நமசிவாயம், உப தலைவர், என். கதிர்காமநாதன் , உப தலைவர் ஜே.ஜ.தயானந்த ராஜா, உப தலைவர் சீ.பிரிந்தாவனம் உள்ளிட்ட ஆலய நிர்வாகசபை உறுப்பினர்கள் அரச உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் போக்குவரத்து,வீதி ஒழுங்கு,பாதுகாப்பு, சுகாதாரம், சாரணியர் சேவை, வாகன தரிப்பிடம், தங்குமிடவசதி, கடைகள், ஒலிபரப்பு சேவை, நிதி விவகாரம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இம்முறை சிவராத்திரி உற்சவத்தில் கலந்துகொள்ள நாட்டின் பல பாகங்களிலிருந்தும் 5 இலட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கமைவாக போக்குவரத்து சேவையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கலாக 83 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட இணக்கம் காணப்பட்டுள்ளது.
அதேபோன்று தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டின் படி மன்னார், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 145 தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட இணக்கம் காணப்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துக்கள் திருக்கேதீஸ்வரம் பகுதியில் தரித்து நின்று உற்சவ முடிவின்பின் பக்தர்களை ஏற்றிசெல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டவுள்ளது.
அதேபோன்று சுகாதாரம் தொடர்பாக விசேட வைத்திய குழு மற்றும் அம்புலன்ஸ் வண்டி சேவையிலிடுபடுத்தப்படவுள்ளதோடு அன்னதானசாலைகள் மற்றும் சமையல்கள் சுகாதார பரிசேர்தகர்களால் மேற்பார்வை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேயை ஆலயப்பகுதியில் பொலித்தீன் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திருக்கேதீஸ்வர உற்சவத்திற்கென 75,000.00 ரூபா ஆலய நிர்வாக சபையினால் ஓதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Reviewed by Author
on
February 11, 2014
Rating:

No comments:
Post a Comment