அண்மைய செய்திகள்

recent
-

இருபத்தினாங்கு வருடங்களின் பின் மன்னார் தினச்சந்தை மீண்டும் வாராந்தை சந்தையாக திறந்து வைப்பு.- படங்கள்

மன்னார் தினச்சந்தையாக இயங்கி வந்த வாராந்த சந்தை சுமார் 24 வருடங்களுக்குப் பின் மீண்டும்
வாராந்த சந்தையாக இன்று சனிக்கிழமை மன்னார் நகர சபையின் தலைவர் எஸ் . ஞானப்பிரகாசம் தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது .

மன்னார் நகர சபையின் தலைவர் எஸ் . ஞானப்பிரகாசம் தலைமையில் இன்று காலை 9.15 மணியளவில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ. துரம் , மன்னார் நகர சபையின் செயலாளர் லேனாட் பிரிட்டோ , மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் மற்றும் மன்னார் நகர சபை உறுப்பினர்கலான என் . நகுசீன் , எஸ் . டிலான் , எம் . பிரிந்தாவனநாதன் , மெரினஸ் பெரேரா உற்பட நகர சபையின் பணியாளர்களும் கலந்து கொண்டு குறித்த வாராந்த சந்தையினை திறந்து வைத்தனர் .

திறக்கப்பட்ட குறித்த வாராந்த சந்தையானது சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மட்டுமே திறக்க முடியும் . உள்ளுர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் தமது உற்பத்திப்பொருட்களை குறித்த இரு தினங்களிலும் இச்சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய முடியும் என மன்னார் நகர சபையின் தலைவர் எஸ் . ஞர்னப்பிரகாசம் தெரிவித்தார் .


1990 ஆம் ஆண்டிற்கு முன் குறித்த சந்தை வாராந்த சந்தையாக காணப்பட்டது . பின் நாட்டில் இடம் பெற்ற யுத்த சூழ்நிலையின் காரணமாக அச்சந்தை தினச்சந்தையாக இயங்கி வந்தது .

இந்த நிலையில் மன்னார் நகர சபை மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக தினச்சந்தை பிரிதொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் 24 வருடங்களின் பின் மீண்டும் வாராந்த சந்தை புனரமைக்கப்பட்டு இன்று சனிக்கிழமை வைபவ ரீதியாயக திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .






இருபத்தினாங்கு வருடங்களின் பின் மன்னார் தினச்சந்தை மீண்டும் வாராந்தை சந்தையாக திறந்து வைப்பு.- படங்கள் Reviewed by NEWMANNAR on February 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.