மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுப் பணிகள் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த மனித புதைகுழியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு அளவீடு செய்யப்பட்டிருந்த மண்டையோடுகளையும், எச்சங்களையும் வெளியில் அகற்றி பெட்டிகளில் அடைக்கும் நடவடிக்கைகள் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன் பிரகாரம் 19 ஆவது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட பணிகளின்போது, 5 மனித எலும்புக்கூடுகள் வெளியில் அகற்றப்பட்டு பாதுகாப்பாக பெட்டிகளில் அடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது
பெட்டிகளில் அடைக்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் நேற்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாகவும், பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறியப்படுகிறது.
மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
Reviewed by NEWMANNAR
on
February 01, 2014
Rating:

No comments:
Post a Comment