மன்னார் சிறுநாவல் குளத்தில் இந்து ஆலயம் உடைக்கப்பட்டமையானது மதநல்லிணக்கத்திற்க்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடகாவே அமையும் - மன்னார் மாவட்ட இந்து மகா சபை கண்டணம்.-படங்கள்
சிறுநாவல் குளம் பகுதியில் அமைந்திருந்த பிள்ளையார் ஆலயம் ஒரு சிலரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதென நாம் அறிகின்றோம். இச் சம்பவமானது இந்துக்கள் மத்தியில் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்டுத்தியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் அன்மையில் அடிக்கடி இடம் பெற்றுவருகின்றது. இது மத நல்லிணக்கத்திற்க்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் செயற்பாடாகவே இந்து மகா சபை கவலையுடன் கருதுகின்றது.
காணி தொடர்பான பிரச்ச்சினைகள் ஏதாவது இருப்பின் உரிய முறையில் பேசியோ சட்ட ரீதியாகவோ அல்லது அரச மட்ட ரீதியாகவோ நடவடிக்கை மேற்கொள்வதை விடுத்து தான்தோன்றித்தனமாக ஆலயத்தை இடித்து தரைமட்டமாக்கியது மத வழிபாட்டின் புனித தன்மைக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடாகவே இந்து மகா சபை கருதுவதாக தெரிவித்துள்ளது.
மேலும் அவர்களது அறிக்கையில் மதங்களுக்கிடையே நல்லிணக்கம் சமாதானம் புரிந்துணர்வு என்பன ஏற்படக் கூடிய விதத்தில் சகல மதத் தலைவர்களும் ஒற்றுமையுடன் செயற்படுவார்கள் என இந்து மகா சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
;.
மன்னார் சிறுநாவல் குளத்தில் இந்து ஆலயம் உடைக்கப்பட்டமையானது மதநல்லிணக்கத்திற்க்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடகாவே அமையும் - மன்னார் மாவட்ட இந்து மகா சபை கண்டணம்.-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
February 12, 2014
Rating:
1 comment:
இதே போன்றே மன்னார் கண்ணாட்டி பகுதியில் திரு சுருபம் உடைக்கப்ப ,மன்னார் முருங்கன் பகுதியில் நற்கருணை பேழையில் இருந்து திவ்விய நற்கருணை வெளியே எடுத்து நாசம் செய்யப்பட்டது ,மேலும் குருக்கள் அவமதிக்கப்பட்டனர் இதற்கெல்லாம் இன்னும் உரிய தீர்வு கிடைக்கவில்லையே
Post a Comment