முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் விபத்து. தாயும் மகளும் பரிதாபகரமாகப் பலி. [படங்கள் இணைப்பு]
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்றுக் காலை 7 மணியளவில் இடம்பெற்ற வாகன
விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர் .
புதுக்குடியிருப்பு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த 25 வயதுடைய தயானந்தன் விஜியசாதனா மற்றும் 3 வயதுடைய தாயானந்தன் யர்சிகா ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர் .
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் நிரப்பிவிட்டு திரும்பிய போது எதிரே வந்த வடி ரகவாகனத்துடன் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர் .
இம்மேட்டார் சைக்கிளில் பயணித்த பிறிதொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனாவைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் . குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .ssss122
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் விபத்து. தாயும் மகளும் பரிதாபகரமாகப் பலி. [படங்கள் இணைப்பு]
Reviewed by NEWMANNAR
on
February 12, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment