மன்/புத்/அன்சாரி அ.மு.க.பாடசாலை பரிசளிப்பு விழா
தேவையுள்ள மனிதர்களுக்கு சேவையாற்றக்கூறுகின்றது இஸ்லாம் இதனையே என் பணியாக நான் செய்தும் வருகின்றேன். ஆனால் காழ்ப்புணர்வு கொண்ட சிலர் எப்போதும் என்மீது சேறு பூசுவதொன்றையே தங்கள் தொழிலாகக் கொண்டுள்ளார்கள் என்றார் கௌரவ வாணிப மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள்
மன்/புத் /அன்சாரி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் அதிபர் அல்ஹாஜ் ஏ.எச். அப்துல் வதூத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி விழாவி;ல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் அவர்கள் தொடர்ந்து பேசுகையில் இவர்கள் உடைந்து கிடக்கும் பாதைகளையோ அலலது வீடுகளுக்கோ ஒரு செங்கள்ளினைத்தானும் உங்களுக்காகப் பெற்றுத்தர முடியாதவர்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
அதிபர் கூறினார் சர்வதேச விருதுகள் எனக்குக்கிடைக்கின்றன என்று என் அரசியல் பாதையில் பத்று சகாபாக்களைப்போல அன்று உதவிய சிலரில் இந்த அதிபரும் ஒருவர் சில மனித உயிர்கள் அன்றைய அரசியல் பயணித்தில் மரணித்திருக்கிறார்கள் சிலர் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளார்கள் தங்கள் அங்கங்களை இலந்திருக்கிறார்கள் இவர்களுக்கெல்லாம் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
மனிதன் என்ற ஒன்றை மட்டுமே பார்க்கும் என்னை கொடியவனாக காட்ட முயற்சிக்கின்றார்கள் சமாதானம் என்ற ஒன்றை மட்டும் நேசிக்கும் நான் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே என் அவா இன்று மன்னார் வலயத்தின் வலயக்கல்விப்பணிப்பாளராக இருக்கும் சியான் அவர்களது வாழ்க்கை வரலாற்றை அன்சாரியின் அறிவகம் எனும் நூலில் வாசித்தபோது உண்மையிலேயே கண்கலங்கினேன் வறுமை கல்விக்குத்தடையே இல்லை என்பதற்கு சிறந்த உதாரணம் இன்றைய வலயக்ல்விப்பணிப்பாளர் அவர்களது வாழ்க்கை வரலாறு
இவ்விழாவில் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான், வடமாகான சபை உறுப்பினர்களான ஜனோபர், றிப்கான் பதியுதீன், முசலிபிரதேச சபைத்தலைவர் யெகியான், முன்னாள் இடம்பெயர் செயலக ஆனையாளர் எஸ்.எச்.மதீன், வடக்கு ஆளுனர் ஆனையாளர் எஸ்.எல்.டீன், வடமேல் மாகான சுகாதார அமைச்சர் நிசாந்த அவர்களின் இணைப்புச் செயலாளர் றிபாஸ் முருங்கன் ம.வி.அரிப்பு ம.வி.அதிபர்கள் உட்பட பெருந்தொகையான பொதுமக்களும் கலந்து கொண்ட மேற்படி வைபவத்தில் அன்சாரி அறிவகம் என்னும் சஞ்சிகை வெளியிடப்பட்டதுடன் பள்ளிவாயில் கணணி அறை, நாலகம் என்பனவும் கௌரவ அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டதுடன் அமைச்சரினால் ஒலிபெருக்கிக்கருவிகளும் பாடசாலைக்கு அவரது நிதியிலிருந்து வழங்கி வைக்கப்பட்டது.
ஏ.அலீம்
மன்/புத்/அன்சாரி அ.மு.க.பாடசாலை பரிசளிப்பு விழா
Reviewed by NEWMANNAR
on
February 14, 2014
Rating:

No comments:
Post a Comment