ஜெனிவா தீர்மானம் குறித்து இந்தியாவுடன் பேச வேண்டியுள்ளது : சுரேஸ் பிறேமச்சந்திரன்
இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் தொடர்பாக, இந்தியாவுடன் கலந்துரையாட வேண்டும் என்றும், அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பாலும் புதுடெல்லி செல்லும் என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு திருட்டுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியத் தலைவர்களுடன் பேச்சு நடத்தும்.
வரும் 3ம் நாள் ஜெனிவாவில் ஆரம்பமாகும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் பரப்புரைக்கு மேலதிகமாக இது இடம்பெறும்.
தீர்மானம் தொடர்பாக, கூட்டமைப்பின் நாடாளுமன்றமன்றக் குழுக் கூட்டத்தில் விவாதித்தோம்.அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆரதரவு தரும் நாடுகளுடன் நாம் பேச வேண்டும்.தீர்மானத்தின் உள்ளடக்கத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம், சிறிலங்காவிலும், ஜெனிவாவிலும் உள்ள ஆதரவு நாடுகளின் இராஜதந்திரிகளுடன் பேசுவோம்.
ஜெனிவா செல்லும் குழு குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. இந்தியாவுக்கும் ஒரு குழுவை அனுப்ப வேண்டும்.
நாம் இந்தியாவுடன் கலந்தாலோசிக்க வேண்டிய தேவை உள்ளது. பெரும்பாலும் அங்கு செல்வோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஜெனிவா தீர்மானம் மற்றும் இரணைமடு நீர் விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த, நாளை மறுநாள் தமிழ்த் தேசியக் கூடமைப்பின் உயர்மட்டக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடக்கவுள்ளது.
இரா.சம்பந்தன் தலையில் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்துக்கு, கட்சியின் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய செய்திகள்
IMG_8117 பாடசாலைக்கு பல்வேறு கல்வி உபகரணங்களையும் வழங்கிய பெற்றோர்களின் முன்மாதிரி (Photos)
arputham ராஜீவோட தவறான முடிவுதானே இதுக்கெல்லாம் காரணம்?
2041604656mano-ganeshan
ஜெனிவா தீர்மானம் குறித்து இந்தியாவுடன் பேச வேண்டியுள்ளது : சுரேஸ் பிறேமச்சந்திரன்
Reviewed by NEWMANNAR
on
February 26, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 26, 2014
Rating:


No comments:
Post a Comment