அண்மைய செய்திகள்

recent
-

தப்பிக்க முயன்ற திருடன் பள்ளத்தில் பாய்ந்து உயிர்துறப்பு

திருட்டுச்சம்பவம் ஒன்றில் ஈடுபட்டதன் பின்பு தப்பித்து ஓடி வந்த திருடனொருவன் பாரிய பள்ளமொன்றில் விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று நாவலப்பிட்டியவில் இன்று இடம் பெற்றுள்ளது.

நாவலப்பிட்டி கொந்தென்னாவ பகுதியில் இன்று பிற்பகல் வேளையில்  குளிக்கச் சென்றவர்களிடம்  பணப்பை ஒன்றைத் திருடிக் கொண்ட  திருடன் உடனடியாக தப்பித்துக் கொள்வதற்காக நாவலப்பிட்டி நகரப்பகுதியை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தவனை சிலர் துரத்தி வந்ததால் அந்தத் திருடன் நாவலப்பிட்டி கம்பளை வீதிக்கும் பெய்லி பாதைக்கும் இடையிலுள்ள 55 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளான்.


இதனைக் கண்டவர்கள் உடனடியாக நாவலப்பிட்டி பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். உடனடியாக சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு வருகைத் தந்த பொலிஸார் திருடன் விழுந்த பள்ளத்துக்குச் சென்று தேடிய போது கிடங்கொன்றில் உயிரிழந்த நிலையில் திருடனைப் பொலிஸார் மீட்டுள்ளனர். 

சுமார் 45 வயது மதிக்கத்தக்க இந்தத் திருடனிடம் ஐந்து பணப்பைகள், தங்காபரணங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் இடம் பெற்ற இடத்துக்கு நாவலப்பிட்டி நீதிமன்ற நீதிவான் வருகைத் தந்து விசாரணை நடத்தியதன் பின்பு உயிரிழந்தவரின் சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது. இந்தச்சம்பவம் தொடர்பாக நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தப்பிக்க முயன்ற திருடன் பள்ளத்தில் பாய்ந்து உயிர்துறப்பு Reviewed by NEWMANNAR on February 26, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.