பெற்றெடுத்த பச்சிளம் சிசுவை கொன்ற தாய்
பெற்றெடுத்த பச்சிளம் சிசுவை கொன்று கழிவறைக்குள் மறைத்த பெண்ணொருவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நுவரெலியா உடபுஸ்ஸலாவை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண் குழந்தை பெற்றெடுக்க நுவரெலியா வைத்தியசாலையின் மகபேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வைத்தியசாலையின் கழிவறைக்குள் சென்று குழந்தை பெற்றுள்ள இந்த பெண் பிறந்த குழந்தையை கொன்று கழிவறை குழிக்குள் போட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதுடன் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்றெடுத்த பச்சிளம் சிசுவை கொன்ற தாய்
Reviewed by NEWMANNAR
on
February 20, 2014
Rating:
(13).jpg)
No comments:
Post a Comment