மன்னார் மனித புதைகுழியில் அகழ்வுப் பணி தொடர்கிறது
மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் 27 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த அகழ்வுப் பணிகள் மன்னார் நீதிமன்ற நீதிபதி ஆனந்தி கனகரட்ணம் மேற்பார்வையின் கீழ், அனுராதபுரம் விசேட சட்ட வைத்திய அதிகாரி டி.இல். வைத்தியரட்ன தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மனித புதைகுழியிலிருந்து நேற்று மேலும் மூன்று மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனித மண்டையோடுகளின் எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, மேலும் நான்கு எலும்புக்கூடுகள் நேற்று முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு பாதுகாப்பாக பெட்டிகளில் அடைக்கப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் இதுவரை 51 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு பெட்டிகளில் அடைக்கப்பட்டுள்ளதுடன், அவை மன்னார் வைத்தியசாலையின் பிரத்தியேக அறையொன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மன்னார் மனித புதைகுழியில் அகழ்வுப் பணி தொடர்கிறது
Reviewed by NEWMANNAR
on
February 20, 2014
Rating:

No comments:
Post a Comment