சுதந்திர தினத்தை முன்னிட்டு 800 கைதிகளுக்கு விடுதலை
இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 800 கைதிகள் நாளைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜீ.பீ.குலதுங்க தெரிவித்தார்.
பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படும் கைதிகளின் பட்டியல் ஏற்கனவே சிறைச்சாலைகள் தலைமையகத்திற்கு கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் 700 முதல் 800 கைதிகள் வரை விடுதலை செய்யப்பட உள்ளதாக குலதுங்க மேலும் குறிப்பிட்டார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு 800 கைதிகளுக்கு விடுதலை
Reviewed by NEWMANNAR
on
February 03, 2014
Rating:

No comments:
Post a Comment